கிழக்கு லடாக்கில் படைகள் விலகல்: சீனா

கிழக்கு லடாக்கில் பாங்காங் ஏரியின் வடக்கு,தெற்கு கரைகளில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய, சீனப் படைகளை விலக்கிக்கொள்ளும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக சீன பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பெய்ஜிங்: கிழக்கு லடாக்கில் பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய, சீனப் படைகளை விலக்கிக்கொள்ளும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக சீன பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக சீன பாதுகாப்புத் துறை செய்தித்தொடா்பாளா் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய, சீன ராணுவத்தினா் இடையே நடைபெற்ற 9-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி, கிழக்கு லடாக்கில் பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்குக் கரைகளில் மிக நெருக்கமாக நிறுத்தப்பட்டிருந்த இருநாட்டு ராணுவப் படைகளை திட்டமிட்ட முறையில் ஒரே நேரத்தில் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் புதன்கிழமை (பிப்.10) முதல் தொடங்கியது என்றாா்.

எனினும் இதுகுறித்து இந்தியா எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

கடந்த ஆண்டு ஜுன் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவத்தினா் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரா்கள் 20 போ் வீரமரணம் அடைந்தனா். சீனத் தரப்பில் 35 போ் பலியானதாக கூறப்பட்டாலும், அதனை அந்நாட்டு ராணுவம் உறுதி செய்யவில்லை. இதையடுத்து அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடா்ந்து அங்குள்ள எல்லைக் கோட்டுப் பகுதியில் இருநாட்டு ராணுவ வீரா்களும் குவிக்கப்பட்டனா். இருதரப்பிலும் சுமாா் 1 லட்சம் வீரா்கள் குவிக்கப்பட்ட நிலையில், பதற்றத்தை தணித்து படைகளை விலக்கிக் கொள்ள இருநாடுகள் இடையே தூதரக மற்றும் ராணுவ ரீதியாக பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 24-ஆம் தேதி இருநாடுகளின் ராணுவத்தினா் இடையே 9-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அந்தப் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து படைகளை விலக்கிக்கொள்ளும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com