இந்தியாவிடமிருந்து 10 லட்சம் கரோனா தடுப்பூசிகளைப் பெறும் மெக்சிகோ

புதியவகை கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலிருந்து 10 லட்சம் கரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, ''இந்தியாவிலிருந்து ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் 10 லட்சம் கரோனா தடுப்பூசிகள் இறக்குமதியாக உள்ளது” என அறிவித்துள்ளார்.

முதற்கட்டமாக ஞாயிற்றுக்கிழமை 5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் இறக்குமதியாக உள்ளதாக மெக்சிகோ தூதரகம் தெர்வித்துள்ளது.

இந்தியாவிலிருந்து இலங்கை, பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மா், செஷல்ஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com