ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசி திட்டம்: ரத்து செய்தது தென் ஆப்பிரிக்கா

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஸெனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்தும் திட்டத்தை நிறுத்திவைத்திருந்த தென் 
oxford075726
oxford075726

ஜோஹன்னஸ்பா்க்: பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஸெனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்தும் திட்டத்தை நிறுத்திவைத்திருந்த தென் ஆப்பிரிக்கா, தற்போது அதனை முழுமையாக ரத்து செய்துள்ளது.

தற்போது அந்த நாட்டில் பரவி வரும் புதுவகை கரோனாவைத் தடுக்கும் திறன் ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசிக்கு இல்லாததால் அந்தத் திட்டம் கைவிடப்படுவதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதற்குப் பதிலாக, இதுவரை அங்கீகரிக்கப்படாத ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் நிறுவன கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுவகைக் கரோனாவை அந்தத் தடுப்பூசி எந்தளவுக்குத் தடுக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com