போர்ச்சுக்கலில் மார்ச் 1 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

கரோனா தொற்று பரவல் காரணமாக போர்ச்சுக்கல் நாட்டில் விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்க கட்டுப்பாடுகள் மார்ச் 1 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது. பொதுமுடக்கம் காராணமாக பல்வேறு நாடுகளில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்தாலும் இன்றும் சில நாடுகளில் இயல்புநிலை திரும்பாமல் உள்ளது. 

இந்நிலையில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் மார்ச் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக போர்ச்சுக்கல் நாட்டின் அதிபர் மார்செலோ ரெபெலோ வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

கரோனா தடுப்பூசிகள் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தாமதம் உள்ளதாக தெரிவித்த அவர் செப்டம்பர் மாதத்திற்குள் திட்டமிட்ட இலக்கை அடைவோம் என உறுதி தெரிவித்துள்ளார்..

போர்ச்சுகலில் இதுவரை 7 லட்சத்து 78 ஆயிரத்து 369 கரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com