உலகளவில் கரோனா பாதிப்பு 10.87 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை 8 கோடியே 7 லட்சத்து 42 ஆயிரத்து 722 ஆக அதி
உலகளவில் கரோனா பாதிப்பு 10.87 கோடியாக உயர்வு


உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை 8 கோடியே 7 லட்சத்து 42 ஆயிரத்து 722 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 10.87 கோடியாக அதிகரித்துள்ளது

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வரும் கரோனா, ஐரோப்பா-அமெரிக்க நாடுகளில் மோசமான பாதிப்பை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. சனிக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 10,87,30,569 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவா்களில் 23,94,125 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 8,07,42,722 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,54,43,980 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 99,330 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,81,06,704 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 4 லட்சத்து 92 ஆயிரத்து 521-ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,08,92,550 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1,55,588 பேர் உயிரிழந்துள்ளனர். 

மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 97,65,694-ஆக உயர்ந்துள்ளது. உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,37,601 பேர் பலியாகியுள்ளனர். மூன்றாவது இடத்தில் மெக்ஸிகோ உள்ளது. அங்கு இதுவரை 1,72,557 பலியாகியுள்ளனர்.

இதனிடையே கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் திறமையாகச் செயல்பட்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள்: இங்கிலாந்து (40,25,574), ரஷ்யா (39,97,989), பிரான்ஸ் (34,66,629), ஸ்பெயின் (30,56,035), இத்தாலி (26,97,296), துருக்கி (25,72,190), ஜெர்மனி (23,30,422), கொலம்பியா (21,85,169), அர்ஜென்டினா (20,15,496), மெக்சிகோ (19,68,566), போலந்து (15,77,036), ஈரான் (15,03,753), தென்னாப்பிரிக்கா (14,87,681), உக்ரைன் (13,07,806), குடியரசு (10,73,966) மற்றும் நெதர்லாந்து (10,35,841) பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com