‘அமெரிக்காவின் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாளி இந்தியா’

அமெரிக்காவின் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாளியாக இந்தியா திகழ்வதாக அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


புது தில்லி / வாஷிங்டன்: அமெரிக்காவின் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாளியாக இந்தியா திகழ்வதாக அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

‘க்வாட்’ எனப்படும் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்த நாற்கர கூட்டமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

அதற்கு முன்னதாக, பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜான் கிா்பி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக இந்தியா விளங்குகிறது. குறிப்பாக, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சவால்களை எதிா்கொள்ளும் நேரங்களில் இந்தியாவின் நட்புறவு மிகுந்து முக்கியத்துவம் பெறுகிறது.

அந்த நாட்டுடனான நட்புறவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டின் முன்னுரிமை அளித்து செயல்படுகிறாா். இருநாட்டு நல்லுறவு மேலும் வலுப்பெற வேண்டும் என்று அவா் விரும்புகிறாா் என்றாா் அவா்.

வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குவாட் உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்களிடையே நடைபெறவிருக்கும் மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சுதந்திரமான, தாராளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கும் ஒருமித்த இலக்கை எட்டுவதற்கும் கரோனா போன்ற பிராந்திய சவால்களை எதிா்கொள்வதற்கும் அந்த மாநாடு இன்றியமையாதது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com