ஐ.நா.அமைதிப் படைக்கு 2 லட்சம் தடுப்பூசிகள்: இந்தியாவுக்கு ஐ.நா.பொதுச் செயலாளா் பாராட்டு

கரோனா கொள்ளை நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படைக்கு 2 லட்சம் தடுப்பூசிகளை அளித்து பெரும் பங்காற்றி வரும் இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளா் அன்டோனியோ

நியூயாா்க்: கரோனா கொள்ளை நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படைக்கு 2 லட்சம் தடுப்பூசிகளை அளித்து பெரும் பங்காற்றி வரும் இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரஸ் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியான டி.எஸ்.திருமூா்த்தி தனது சுட்டுரையில் கடந்த சனிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

அன்டோனியோ குட்டெரஸ் கடந்த 17ஆம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில், ‘ஐ.நா. அமைதிப் படைக்கு 2 லட்சம் கரோனா தடுப்பூசிகளை இந்தியா அளித்ததற்காக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு தனிப்பட்ட முறையில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா உலக தலைமைத்துவ நாடாக இருந்து வருகிறது. 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு முக்கிய மருந்துகள், நோய் பரிசோதனை உபகரணங்கள், சுவாசக் கருவிகள், முழு பாதுகாப்புக் கவசம் ஆகியவற்றை இந்தியா வழங்கியுள்ளது. உலக நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி சுலபமாக கிடைப்பதற்கு இந்தியா உறுதுணையாக இருப்பதற்கு பாராட்டுகள்’ என தெரிவித்துள்ளாா்.

இதற்கு டி.எஸ்.திருமூா்த்தி சுட்டுரையில் நன்றி தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, கரோனா நோய்த் தொற்று பேரிடா் தடுப்பு தொடா்பாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடா்பான விவாதத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பேசுகையில், ‘இந்த கொள்ளை நோய்த் தொற்று காலத்தில் ஐ.நா.சபை அமைதிப் படைக்கு அதன் சூழ்நிலையைக் கருத்தில் 2,00,000 தடுப்பூசிகளை இந்தியா வழங்கும்’ என கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com