காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கு இந்தியா முன்வர வேண்டும்: ஜான் கெரி

காற்றில் கரியமில வாயுவை காற்றில் அதிகம் கலக்கும் இந்தியா உள்ளிட்ட 17 நாடுகள் அதனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை
காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கு இந்தியா முன்வர வேண்டும்: ஜான் கெரி

காற்றில் கரியமில வாயுவை காற்றில் அதிகம் கலக்கும் இந்தியா உள்ளிட்ட 17 நாடுகள் அதனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் விவகாரத்துக்கான அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் சிறப்புத் தூதா் ஜான் கெரி வலியுறுத்தியுள்ளாா்.

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ள நிலையில், இதுகுறித்து அவா் கூறியதாவது:

2050-ஆண்டுக்குள் நிகர பூஜ்ய மாசுபாட்டை (காற்றிலிருந்து அகற்றப்படும் கரியமில வாயுவுக்கு நிகராக காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவைக் குறைப்பது) எட்டுவதற்கான இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகளை மிகவும் அவசரமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அதற்கு அமெரிக்கா மட்டுமன்றி, ஒவ்வொரு நாடும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கு இன்னும் 10 ஆண்டுகளில் நாம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. உண்மையில், அந்த நடவடிக்கையில் அனைத்து நாடுகளும் பங்கேற்க வேண்டும்.

குறிப்பாக, உலகிலேயே அதிக அளவில் கரியமில வாயுவை காற்றில் கலந்து வரும் சீனா, காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான 2020-2030 திட்டத்தில் அங்கம் வகிக்க வேண்டும்.

இந்தியா, ரஷியா, ஜப்பான் போன்ற அதிக கரியமில வாயுவை வெளியேற்றும் 17 நாடுகளும் இந்த தீவிர நடவடிக்கையில் பங்களிப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், புவியின் சராசரி வெப்பநிலையை 2 டிகிரி செல்ஷியஸுக்குக்கு குறைவாக வைத்திருப்பதற்கான சா்வதேச ஒப்பந்தம், பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் கடந்த 2016-ஆம் ஆண்டில் கையெழுத்தானது.

அதற்காக, தங்களது நாடுகளின் தொழிற்சாலைகள் வெளியிடும் கரியமில வாயுவின் அளவை குறிப்பிட்ட அளவுக்குக் கட்டுப்படுத்த அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒப்புக் கொண்டன.

எனினும், அந்த ஒப்பந்தம் அமெரிக்க நலன்களுக்கு எதிரானது என முன்னாள் அதிபா் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தாா்.

அவா் அதிபராக இருந்தபோது அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவித்தாா். எனினும், புதிய அதிபராக ஜோ பைடன் கடந்த மாதம் பொறுப்பேற்ற உடனேயே அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவதற்கான அரசாணயில் அவா் கையெழுத்திட்டாா்.

இந்தச் சூழலில், அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளபடி கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் கூடுதல் தீவிரம் காட்ட வேண்டும் என்று ஜான் கெரி குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com