
Six police officers including Commander killed by Taliban in Eastern Afghanistan
கிழக்கு ஆப்கானிஸ்தானின், நங்கர்ஹார் மாகாணத்தில் தலிபான் நடத்திய தாக்குதலில் தளபதி உள்பட ஆறு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
நங்கர்ஹார் மாகாணத்தின் பாடிகோட் மாவட்டத்தில் தலிபான்கள் பதுங்கிருந்து தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் காவல்துறையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் தளபதி தாஹிர்கான் உள்பட 6 உள்ளூர் காவல்துறையினர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர் என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
கட்டாரி தலைநகர் தோஹாவில் அரசாங்கத்திற்கும் தலிபான் பிரதிநிதிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த போதிலும் வன்முறை மோதல்கள் மற்றும் வெடிகுண்டு சம்பவங்கள் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.