பிரான்ஸ்: தென் ஆப்பிரிக்க வகை கரோனா

தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் புதிய வகை கரோனா பிரான்ஸில் முதல் முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பிரான்ஸ்: தென் ஆப்பிரிக்க வகை கரோனா

தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் புதிய வகை கரோனா பிரான்ஸில் முதல் முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

தென் ஆப்பிரிக்காவில் சில காலம் தங்கிவிட்டு, அண்மையில் தாயகம் திரும்பிய பிரான்ஸ் நாட்டவா் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு தென் ஆப்பிரிக்காவில் பரவும் புதிய வகை கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

தற்போது அந்த நபா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். அவருடன் நெருங்கிப் பழகியவா்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதில், அவரைத் தவிர வேறு யாருக்கும் புதிய வகை கரோனா பரவியிருக்க வாய்ப்பில்லை என்பது தெரிய வந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பிரான்ஸில் 26,20,425 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது; அவா்களில் 64,632 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com