அலிபாபாவின் இசை ஒலிபரப்பு தளம் மூடப்படுவதாக அறிவிப்பு

சீனாவின் இணைய விற்பனைதளமான அலிபாபா நிறுவனம் தனது இசை ஒலிபரப்பு தளமான சியாமி மியூசிக்கை மூடுவதாக அறிவித்துள்ளது.
அலிபாபாவின் இசை ஒலிபரப்பு தளம் மூடப்படுவதாக அறிவிப்பு
அலிபாபாவின் இசை ஒலிபரப்பு தளம் மூடப்படுவதாக அறிவிப்பு

சீனாவின் இணைய விற்பனைதளமான அலிபாபா நிறுவனம் தனது இசை ஒலிபரப்பு தளமான சியாமி மியூசிக்கை மூடுவதாக அறிவித்துள்ளது.

சீனத்தைச் சேர்ந்த முன்னணி இணைய வர்த்தக நிறுவனமாக அறியப்பட்டு வருகிறது அலிபாபா. சீனத்தில் தனது வெற்றிக்கொடியை நிலைநாட்டிய அலிபாபா நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் தனது கிளையைப் பரப்பி வருகிறது.

இந்த நிலையில், சீன அரசுக்கும் ஜாக் மாவுக்கும் இடையே மோதல் போக்கு உருவானது. அலிபாபா நிறுவன வளர்ச்சியைத் தடுக்கும் வகையில், சில கோட்பாடுகளை சீன அரசு வகுப்பதாகவும் பழமைவாதத்தை சீன அரசு கைவிட வேண்டும் என்றும் ஜாக் மா கடந்த அக்டோபர் மாதம் வெளிப்படையாகவே விமரிசித்திருந்தார்.

இந்த விமரிசனத்தைத் தொடர்ந்து சீன அரசின் பல்வேறு தொல்லைகளுக்கு அலிபாபா நிறுவனமும், ஜாக் மாவும் ஆளானதாகக் கூறப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து அலிபாபா நிறுவனத்தின் இசை ஒலிபரப்புதளமான சியாமி மியூசிக் செயல்திறன் மாற்றங்கள் காரணமாக தனது சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சியாமிக் மியூசிக் தளத்தை 2013ஆம் ஆண்டில் அலிபாபா நிறுவனம் வாங்கியது.

பயனர்களின் பன்முகப்படுத்தப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ள சியாமி பிப்ரவரி 5ஆம் தேதி தனது சேவையை நிறுத்திக் கொள்வதாகத் தெரிவித்துள்ளது.

சியாமி மியூசிக் தளம் மூடப்பட்டதற்கு அரசியல் அழுத்தங்கள் காரணமாக இருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com