தென்கொரியாவில் பிரிட்டன் விமானங்களுக்கான தடை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு

புதிய வகை கரோனா பரவல் காரணமாக பிரிட்டன் விமானங்களுக்கானத் தடையை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து தென்கொரிய அரசு உத்தரவிட்டுள்ளது.
தென்கொரியாவில் பிரிட்டன் விமானங்களுக்கான தடை மேலும் 2 வாரம் நீட்டிப்பு
தென்கொரியாவில் பிரிட்டன் விமானங்களுக்கான தடை மேலும் 2 வாரம் நீட்டிப்பு

புதிய வகை கரோனா பரவல் காரணமாக பிரிட்டன் விமானங்களுக்கானத் தடையை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து தென்கொரிய அரசு உத்தரவிட்டுள்ளது.

வேகமாகப் பரவும் வகையில் தன்னைத் தானே தகவமைத்துக் கொண்ட கரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் அந்நாட்டுடனான விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன.

இந்நிலையில் தென்கொரிய நாட்டில் புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள அந்நாட்டு அரசு பிரிட்டன் விமானங்களுக்கு விதித்திருந்த தடையை ஜனவரி 21 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. 

இதற்கான அறிவிப்பை தென்கொரிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. டிசம்பர் 28 வரை விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் இதுவரை புதிய வகை கரோனா தொற்றுக்கு 11 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com