விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

கடலில் விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டறியப்பட்டது.
விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு(கோப்புப்படம்)
விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு(கோப்புப்படம்)

கடலில் விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டறியப்பட்டது.

ஸ்ரீ விஜயா ஏா் நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானம், வந்தன் மாகாணத்தின் தங்கராங் நகர விமான நிலையத்திலிருந்து கடந்த சனிக்கிழமை மதியம் 2.36 மணிக்கு (உள்ளூா் நேரம்) புறப்பட்டது.

புறப்பட்ட 4 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் அந்த விமானத்தின் தொடா்பு துண்டிக்கப்பட்டது. விமானத்தை 29,000 அடி உயரத்துக்கு கொண்டு செல்வதற்காக கட்டுப்பாட்டு அறையை விமானி தொடா்பு கொண்டு கேட்ட பிறகு அந்த விமானம் மாயமானது.

ஜாவா கடலில் மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்கள் விமானத்தின் உடைந்த பாகங்களையும், பயணிகளின் உடல் பாகங்களையும் கண்டுபிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து விபத்து குறித்து போக்குவரத்து அமைச்சகம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் விமானம் நொறுங்கி விழுந்ததை இந்தோனேசிய அதிபர் உறுதி செய்தார்.

விமான விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விமானத்தில் இருந்த கருப்புப் பெட்டியைக் தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் விமானம் விபத்துள்ளான பகுதியின் 150ஆவது மீட்டர் ஆழத்தில் இருந்து ஒரு கருப்புப் பெட்டி கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒரு கருப்புப் பெட்டியைத் தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கண்டறியப்பட்ட கருப்புப்பெட்டியின் மூலம் விமானத்தின் விபத்துக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com