டிரம்ப் பதவி நீக்க நடவடிக்கைகள் தொடக்கம்: தீர்மானம் தாக்கல் செய்கிறார் நான்சி பெலோசி

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதுதொடர்பான தீர்மானத்தை பிரதிநிதிகள் சபையில் அதன் தலைவர் நான்சி பெலோசி தாக்கல் செய்யவுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதுதொடர்பான தீர்மானத்தை பிரதிநிதிகள் சபையில் அதன் தலைவர் நான்சி பெலோசி தாக்கல் செய்யவுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதுதொடர்பான தீர்மானத்தை பிரதிநிதிகள் சபையில் அதன் தலைவர் நான்சி பெலோசி தாக்கல் செய்யவுள்ளார்.


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதுதொடர்பான தீர்மானத்தை பிரதிநிதிகள் சபையில் அதன் தலைவர் நான்சி பெலோசி தாக்கல் செய்யவுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் புகுந்து டிரம்ப்பின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, டிரம்ப் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. 

இந்நிலையில், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களுக்கு சபை தலைவர் நான்சி பெலோசி ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பது: 

டிரம்ப்பை பதவியிலிருந்து நீக்க 25-ஆவது சட்டத்திருத்தத்தின் அதிகாரங்களை செயல்படுத்தும்படி துணை அதிபர் மைக் பென்ûஸ வலியுறுத்தி பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படும். அந்த வாக்கெடுப்பின்படி துணை அதிபர் செயல்படாவிட்டால் 24 மணி நேரத்துக்குப் பின்னர், பதவிநீக்கம் தொடர்பான சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். 

நமது அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க நாம் விரைவாக செயல்பட வேண்டும். ஏனெனில் அதிபர் டிரம்ப் இந்த இரண்டுக்கும் உடனடி அச்சுறுத்தலாக உள்ளார். நமது ஜனநாயகத்தின் மீது இந்த அதிபரால் நடத்தப்படும் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. எனவே உடனடி நடவடிக்கை அவசியமாகிறது என அந்தக் கடிதத்தில் பெலோசி தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, 25-ஆவது சட்டத்திருத்தத்தின்படி டிரம்ப்பை அதிபர் பதவியிலிருந்து நீக்கும்படி துணை அதிபர் மற்றும் அமைச்சரவை அதிகாரிகளை வலியுறுத்தி பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்பு தீர்மானத்தை நான்சி பெலோசி கொண்டுவருவார். 

அதிபராகப் பொறுப்பு வகிக்கும் ஒருவர் மரணமடைந்தாலோ, உடல் அல்லது மனநலத் தகுதியை இழந்தாலோ அவரது அதிகாரத்தை துணை அதிபருக்கு மாற்றுவதற்கு அரசியலமைப்பின் 25-ஆவது சட்டத்திருத்தம் வழிசெய்கிறது. "ஆபத்தானவர்' என்ற நிலையை அடைந்து பதவியிலிருந்து விலக மறுக்கும் அதிபரையும் இச்சட்டத்திருத்தத்தின்படி பதவியிலிருந்து நீக்க முடியும்.

இருப்பினும், பிரதிநிதிகள் சபையின் அமர்வு தற்போது நடைபெறாததால், அதன் கருத்தில் ஆட்சேபணை இருக்க வாய்ப்புள்ளது. ஆதலால், இத்தீர்மானத்தை செவ்வாய்க்கிழமை இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பெலோசி முன்வைப்பார். அதில் தீர்மானம் நிறைவேறினால், டிரம்ப்பை அதிபர் பதவியிலிருந்து துணை அதிபரும், அமைச்சரவை அதிகாரிகளும் 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும். இல்லாவிட்டால், டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கொண்டு வருவர்.

அதிகரிக்கும் நெருக்கடி: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றபோதும், அதை ஏற்க அதிபர் டிரம்ப் மறுத்து வருகிறார். இந்நிலையில், பைடனின் வெற்றியை அதிகாரபூர்வமாக உறுதி செய்வதற்காக நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அப்போது டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்துக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். டிரம்ப்பின் தூண்டுதலின்பேரிலேயே இந்தக் கலவரம் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நாடாளுமன்ற கலவரத்துக்கு பொறுப்பேற்று அதிபர் டிரம்ப் உடனடியாகப் பதவி விலகாவிட்டால், அவரை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்படும் என பிரதிநிதிகள் சபை தலைவர் நான்சி பெலோசி கடந்த வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தார். 

இந்நிலையில், பதவி நீக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. புதிய அதிபராக பைடன் ஜன. 20-இல் பதவியேற்கவுள்ளார். அதுவரை பதவிக் காலம் உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே பதவி விலக டிரம்ப்புக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

குடியரசுக் கட்சியை சேர்ந்த செனட் உறுப்பினர்கள் பாட் டூமே, லிஸா முர்கோவ்ஸ்கி ஆகியோரும் டிரம்ப் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com