டிரம்பின் கொள்கைகளுக்கு எதிரான 15 உத்தரவுகளில் கையெழுத்திட்ட ஜோ பைடன்

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிரான 15 முக்கிய உத்தரவுகளில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
டிரம்பின் கொள்கைகளுக்கு எதிரான 15 உத்தரவுகளில் கையெழுத்திட்ட ஜோ பைடன்
டிரம்பின் கொள்கைகளுக்கு எதிரான 15 உத்தரவுகளில் கையெழுத்திட்ட ஜோ பைடன்


வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிரான 15 முக்கிய உத்தரவுகளில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக ஜோ பைடனும் (78) முதல் பெண் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரிஸும் (56) புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட முதல் நாளிலேயே, டொனால்ட் டிரம்பின் கொள்கைகளை அப்படியே தலைகீழாக மாற்றும் 15 உத்தரவுகளில் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவது தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் பிறப்பித்திருந்த உத்தரவை மாற்றி, பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்று ஜோ பைடன் அறிவித்துள்ளார். அதற்கான உத்தரவிலும் கையெழுத்திட்டுள்ளார்.

அதில்லாமல், அமெரிக்க - மெக்சிகோ எல்லைச் சுவர் கட்டுமானம் நிறுத்தம், அமெரிக்க - கனடா எரிவாயு இணைப்பு திட்டமான கீஸ்டோன் எக்ஸ்.எல். பைப்லைன் திட்டம் ரத்து உள்ளிட்ட உத்தரவுகளிலும் கையெழுத்திட்டுள்ளார்.

குடியேற்றம், இனவாத பிரச்னைகள் உள்ளிட்ட விவகாரங்களிலும் டிரம்பின் முடிவுகளை மாற்றும் உத்தரவுகளில் பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்க அதிபா்கள் வழக்கமாகப் பதவியேற்றுக்கொள்ளும் நாடாளுமன்றத்தின் மேற்குப் பகுதியில் நிகழ்ச்சி நடைபெற்றது. கரோனா பரவலைத் தவிா்ப்பதற்காக, வழக்கமான பெரிய கூட்டம் இல்லாமல் குறைந்த எண்ணிக்கையிலான வருகையாளா்களுடன் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com