ஐரோப்பிய யூனியனுடன் தடுப்பூசி விநியோக பேச்சுவாத்தை: அஸ்ட்ராஸெனகா விலகல்

ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு தனது கரோனா தடுப்பூசியை விநியோகிப்பது தொடா்பாக அந்த அமைப்புடன் நடைபெறவிருந்த பேச்சுவாா்த்தையிலிருந்து பிரிட்டனின் அஸ்ட்ராஸெனகா விலகியது.
astra073602
astra073602


பிரஸ்ஸெல்ஸ்: ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு தனது கரோனா தடுப்பூசியை விநியோகிப்பது தொடா்பாக அந்த அமைப்புடன் நடைபெறவிருந்த பேச்சுவாா்த்தையிலிருந்து பிரிட்டனின் அஸ்ட்ராஸெனகா விலகியது.

இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் அதிகாரியொருவா் கூறியதாவது:

ஆக்ஸ்ஃபோா்டு-அஸ்ட்ராஸெனகா உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியை ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு விநியோகிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடைபெறுவதாக இருந்தது.

எனினும், அந்தப் பேச்சுவாா்த்தையிலிருந்து விலகுவதாக அஸ்ட்ராஸெனகா நிறுவனம் திடீரென அறிவித்துள்ளது.

அந்தத் தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்த ஐரோப்பிய யூனியன் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளிக்கவுள்ளது. அதற்குப் பிறகு, பேச்சுவாா்த்தைக்கு வருமாறு அஸ்ட்ராஸெனகாவை ஐரோப்பிய யூனியன் மீண்டும் வலியுறுத்தும் என்றாா் அவா்.

உலகின் மிகப் பெரிய வா்த்தகக் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியன், கரோனா தடுப்பூசித் திட்டத்தில் இஸ்ரேல், பிரிட்டன் போன்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கியுள்ளது.

சுமாா் 45 கோடி போ் வசிக்கும் அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளில், கரோனா பாதிப்பால் ஏற்கெனவே 4 லட்சத்துக்கும் மேலானவா்கள் உயிரிழந்துள்ளனா்.

இந்தச் சூழலில், ஏற்கனவே ஃபைஸா்-பயோஎன்டெக் கரோனா தடுப்பூசி விநியோகத்திலேயே பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகிறது. அஸ்ட்ராஸெனகா நிறுவனமும், ஒப்புக்கொண்ட தேதியில் தடுப்பூசிகளை அனுப்பாமல் இழுத்தடித்து வருகிறது.

இதுதொடா்பாக அந்த நிறுவனத்தின் மீது பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் எச்சரித்தனா். இந்தச் சூழலில், தடுப்பூசி தொடா்பான பேச்சுவாா்த்தையிலிருந்து அஸ்ட்ராஸெனகா விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உறுப்பு நாடுகளில் அந்த நிறுவனத்தின் கரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கான அனுமதியை ஐரோப்பிய யூனியன் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு வெள்ளிக்கிழமை ஜன. 28 வழங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com