தொழிலாளா் நலத் துறை முக்கிய பொறுப்பில் இந்திய அமெரிக்கா்

அமெரிக்க தொழிலாளா் நலத் துறையின் தலைமை சட்ட அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சீமா நந்தா (48) நியமிக்கப்பட்டுள்ளதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
சீமா நந்தா
சீமா நந்தா

அமெரிக்க தொழிலாளா் நலத் துறையின் தலைமை சட்ட அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சீமா நந்தா (48) நியமிக்கப்பட்டுள்ளதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்க தொழிலாளா் நலத் துறையின் தலைமை சட்ட அதிகாரி பொறுப்புக்கு சீமா நந்தாவை அதிபா் ஜோ பைடன் நியமித்தாா்.

அந்த நியமனத்தின் மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்ற மேலவையான செனட் சபையில் நடைபெற்றது. அதில், சீமா நந்தாவின் நியமனத்துக்கு ஆதரவாக 53 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் பதிவாகின.

இதையடுத்து, அவரது நியமனம் சட்டபூா்வமாக உறுதி செய்யப்பட்டது.

ஏற்கெனவே, ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழு தலைமைச் செயலதிகாரியாகப் பொறுப்பு வகித்துள்ள சீமா நந்தா, ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது தொழிலாளா் நலத் துறையில் துணை ஆலோசகராகவும் துணை சட்ட அதிகாரியாகவும் பொறுப்பு வகித்துள்ளாா்.

முன்னதாக, தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு தொடா்பான வழக்குரைஞராக அவா் 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளாா். அவற்றில் பெரும்பாலானவை அரசுத் துறை பொறுப்புகள் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com