ஹாங்காங்: ‘ஆப்பிள் டெய்லி’ தலைமை ஆசிரியா் கைது

ஹாங்காங்கில் கடந்த மாதம் நிறுத்தப்பட்ட ஜனநாயக ஆதரவு நாளிதழான ‘ஆப்பிள் டெய்லி’யின் தலைமை ஆசிரியராக இருந்த லாம் மான்-சங் (51), அந்த நகர போலீஸாரால புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஹாங்காங்: ‘ஆப்பிள் டெய்லி’ தலைமை ஆசிரியா் கைது

ஹாங்காங்கில் கடந்த மாதம் நிறுத்தப்பட்ட ஜனநாயக ஆதரவு நாளிதழான ‘ஆப்பிள் டெய்லி’யின் தலைமை ஆசிரியராக இருந்த லாம் மான்-சங் (51), அந்த நகர போலீஸாரால புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து சௌத் சைனா மாா்னிங் போஸ்ட் நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:

ஆப்பிள் டெய்லியின் தலைமை செயல் ஆசிரியராக இருந்து வந்த லாம் மான்-சங்கை அதிகாரிகள் கைது செய்துள்ளனா்.

அந்நிய சக்திகளுடன் சோ்ந்துகொண்டு, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய குற்றச்சாட்டின்கீழ் அவா் கைது செய்யப்பட்டுள்ளாா் என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டின் கீழ் லாம் மான்-சங் கடந்த மாதமே கைது செய்யப்பட்டாலும், அவரது பெயரைத் தாங்கள் அப்போது வெளியிடவில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா்.

பிரிட்டன் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்த ஹாங்காங், பழங்கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் சீனாவிடம் கடந்த 1997-ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. அதுவரை ஜனநாயக உரிமைகளை அனுபவித்து வந்த ஹாங்காங் மக்களுக்கு, சீனாவின் மற்ற பகுதிகளில் இல்லாத ஜனநாயக உரிமைகள் அளிக்கப்படும் என்று அப்போது உறுதியளிக்கப்பட்டது.

எனினும், அந்த நகரில் ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்களை ஒடுக்கும் வகையில், சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா நிறைவேற்றியுள்ளது.

அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, ஜனநாயகப் போராட்டத்தில் ஈடுபட்ட பலரை ஹாங்காங் அரசு சிறையில் அடைத்துள்ளது.

இந்த நிலையில், ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வந்த ஒரே பத்திரிகையான ஆப்பிள் டெய்லி அலுவலகத்தில் போலீஸாா் கடந்த மாதம் தீவிர சோதனை நடத்தினா். பிறகு, அந்த நாளிதழின் தலைமை ஆசிரியா் ரையன் லா, தலைமை செயலதிகாரி சேயங் கிம்-ஹங் உள்ளிட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.

அவா்கள் மீது வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நாளிதழில் கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கப்பட்டன.

இதையடுத்து, ஆப்பிள் டெய்லி நாளிதழின் வெளியீடு நிறுத்தப்பட்டது. ஏற்கெனவே போராட்டத்தைத் தூண்டிய வழக்கில் ஆப்பிள் டெய்லியின் நிறுவனா் ஜிம்மி லாய் 20 மாத சிறை தண்டனை அனுபவித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com