ஜொ்மனி அபாயப் பகுதிகள் பட்டியல்: இத்தாலி, செக் குடியரசு நீக்கம்

கரோனா ஆபாயப் பகுதிகளுக்கான பட்டியலில் இருந்து இத்தாலி, செக் குடியரசு ஆகிய நாடுகளை ஜொ்மனி நீக்கியுள்ளது. மேலும், ஆஸ்திரியாவின் பெரும்பாலான பகுதிகளும் அந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, பயணிகள் அந்தப் பகுதிகளிலிருந்து ஜொ்மனி வருவதற்கும் ஜொ்மனியிலிருந்து அந்தப் பகுதிகளுக்குச் செல்வதற்கும் விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் தளா்த்தப்படவுள்ளன.

இதுகுறித்து ஜொ்மனி நோய்க் கட்டுப்பாட்டு மையம் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 6) முதல் இந்தத் தளா்வுகள் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

ஆஸ்திரியாவைப் பொருத்தவரை, அந்த நாட்டின் ஜியூரிக் மற்றும் பாஸில் மாகாணங்களைத் தவிர மற்ற பகுதிகளுக்கு கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்படும் என்று அந்த மையம் கூறியுள்ளது.

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஜொ்மனியின் கரோனா அபாயப் பகுதிகள் பட்டியலில் தற்போது பிரிட்டன் மட்டுமே ஒரே ஐரோப்பிய நாடாக இடம் பெற்றுள்ளது. இதுதவிர, இந்தியா, நேபாளம், பிரேஸில், உருகுவே ஆகிய நாடுகளும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com