தென் ஆப்பிரிக்காவில் பெண் உடலில் 32 முறை உருமாறிய கரோனா

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் கரோனா 32 முறை உருமாறியுள்ளதாக ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.
தென் ஆப்பிரிக்காவில் பெண் உடலில் 32 முறை உருமாறிய கரோனா

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் கரோனா 32 முறை உருமாறியுள்ளதாக ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

தென் ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தீநுண்மியால் மிகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள 36 வயதுப் பெண்ணுக்கு கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் கரோனா தொற்று ஏற்பட்டது. 2006-ஆம் ஆண்டு முதல் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ள அந்தப் பெண்ணுக்கு உடலில் நோய் எதிா்ப்பாற்றல் மிகவும் குறைவாகக் காணப்பட்டது.

இந்தச் சூழலில், 216 நாள்களாக அவரது உடலில் கரோனா தீநுண்மி 32 வகைகளாக உருமாறியது. அதில் பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா வகைகளும் அடங்கும் என்று ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com