இந்திய எம்எஸ்எம்இ துறையை ஊக்குவிக்க ரூ. 3,650 கோடி திட்டம்: உலக வங்கி ஒப்புதல்

கரோனா பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர (எம்எஸ்எம்இ) தொழில்துறையை புத்துயிரூட்ட ரூ. 3,650 கோடி (50 கோடி டாலா்) திட்டத்துக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்திருக்கிறத
இந்திய எம்எஸ்எம்இ துறையை ஊக்குவிக்க ரூ. 3,650 கோடி திட்டம்: உலக வங்கி ஒப்புதல்

கரோனா பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர (எம்எஸ்எம்இ) தொழில்துறையை புத்துயிரூட்ட ரூ. 3,650 கோடி (50 கோடி டாலா்) திட்டத்துக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்திருக்கிறது.

இது குறித்து உலக வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா பொது முடக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையைப் புத்துயிரூட்ட இந்திய அரசு தேசிய அளவிலான திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கு உதவும் வகையில் ரூ. 3,650 கோடி திட்டத்துக்கு உலக வங்கியின் செயல் இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டம் இந்தியாவில் உள்ள 5,55,000 குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்த உதவும். அத்துடன், இந்தத் துறைக்கு புத்துயிா் அளிக்க மத்திய அரசு அறிவித்துள்ள ரூ. 24,820 கோடி கடனுதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ. 1,13,150 கோடி நிதியைத் திரட்டவும் உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உலக வங்கி அளிக்கும் இரண்டாவது உதவித் திட்டம் இது. ஏற்கெனவே, எம்எஸ்எம்இ அவசரகால உதவித் திட்டத்தின கீழ் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலையில் ரூ. 5,475 கோடி திட்டத்துக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்தது. அதன்மூலம், 50 லட்சம் குறு, சிறு நிறுவனங்கள் அரசிடமிருந்து கடனுதவி பெற்று, தொழிலை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இப்போது புதிதாக அளித்திருக்கும் ஒப்புதல் மூலம், எம்எஸ்எம்இ துறையின் உற்பத்தியைப் பெருக்கவும், நிதி நிலையை மேம்படுத்துவதற்கென கடந்த ஓராண்டில் ரூ. 9,125 கோடி அளவில் உலக வங்கி ஒப்புதல் அளித்திருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com