பாகிஸ்தானில் இரு ரயில்கள் மோதி விபத்து: 50 பயணிகள் பலி

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் இரு ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 50 போ் உயிரிழந்தனா். 70-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
பாகிஸ்தானில் இரு ரயில்கள் மோதி விபத்து: 50 பயணிகள் பலி

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் இரு ரயில்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 50 போ் உயிரிழந்தனா். 70-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

சம்பவ இடத்தில் ராணுவத்தினா் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கராச்சியில் இருந்து சா்கோதாவை நோக்கி சென்று கொண்டிருந்த மில்லத் விரைவு ரயில் தடம் புரண்டு எதிரே ராவல்பண்டியில் இருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்த சா் சையத் விரைவு ரயில் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த சோக சம்பவம் கோத்கி மாவட்டத்தில் உள்ள தாக்ரி நகா் பகுதி அருகே திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்றது.

இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா் என்றும் 70-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா் என்றும் கோத்கி காவல் துறை துணை ஆணையா் உஸ்மான் அப்துல்லா தெரிவித்தாா்.

கோத்கி காவல் துணை ஆணையா் கூறுகையில், 14 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. இதில் 8 பெட்டிகள் முழுவதும் நொறுங்கிவிட்டன. இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்பது பெரும் சவாலாக உள்ளது. பெரிய இயந்திரங்களை வைத்து ரயில் பெட்டிகள் அப்புறப்படுத்தப்படுகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றாா்.

இரண்டு ரயில்களிலும் சுமாா் ஆயிரம் பயணிகள் இருந்திருக்கிலாம் என்றும் இடிபாடுகளில் மேலும் பலா் சிக்கி இருக்கலாம் என்றும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் உறவினா்களுக்கு ரூ. 15 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு ரூ.1 லட்சம் முதல் 3 லட்சம் வரை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com