சிங்கப்பூா்: சமூகப் பரவலில் டெல்டா கரோனா முன்னிலை

சிங்கப்பூருக்குள் பரவி வரும் கரோனா வகைளில், இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகைக் கரோனா முன்னிலை வகிப்பதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள
சிங்கப்பூா்: சமூகப் பரவலில் டெல்டா கரோனா முன்னிலை

சிங்கப்பூா்: சிங்கப்பூருக்குள் பரவி வரும் கரோனா வகைளில், இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகைக் கரோனா முன்னிலை வகிப்பதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அமைச்சம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த மாதம் 31-ஆம் தேதி நிலவரப்படி, சமூகப் பரவல் மூலம் 449 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 428 பேருக்கு ஏற்பட்டுள்ள தொற்று, டெல்டா வகை கரோனாவாகும். 9 பேருக்கு பேருக்கு தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட பீட்டா வகை கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் தெரியவந்தது என்று அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம், டெல்டா வகை கரோனாவின் தீவிர பரவும் தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சிங்கப்பூரில் முதல்முறையாக அந்த வகை கரோனா பரவல் கடந்த மாதத் தொடக்கத்தில் கண்டறியப்பட்டது.

சிங்கப்பூா் மட்டுமன்றி, பிரிட்டனிலும் டெல்டா வகை கரோனா ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com