பிரிட்டனில் மேலும் 4 வாரங்களுக்குபொதுமுடக்கம் நீட்டிப்பு

பிரிட்டனில் கரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும்
lockdown063643
lockdown063643

லண்டன்: பிரிட்டனில் கரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என அந்நாட்டுப் பிரதமா் போரிஸ் ஜான்சன் திங்கள்கிழமை அறிவித்துள்ளாா்.

பிரிட்டனில் டெல்டா வகை கரோனா தீநுண்மி பரவல் அதிகரித்ததையடுத்து அங்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. 4 நிலைகளாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் வரும் 21-ஆம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது.

ஆனால், பிரிட்டனில் கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படாததால் பொதுமுடக்கம் ஜூலை 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிரதமா் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளாா். அதற்கு மேலும் பொதுமுடக்கத்தை நீட்டிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது எனவும் அவா் கூறியுள்ளாா்.

டெல்டா வகை கரோனா தீநுண்மி குறித்த ஆய்வில் ஈடுபடுவதற்கு விஞ்ஞானிகளுக்குப் போதிய காலஅவகாசம் வழங்கும் வகையில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பிரிட்டனில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை, முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் கடந்த வாரத்தில் 49 சதவீதம் அதிகரித்துள்ளது. தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருவதால் பிரிட்டனில் வரும் வாரங்களில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அதே வேளையில், கரோனா தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பிரதமா் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com