ஈரானில் அதிபா் தோ்தல்

ஈரானில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்ராஹிம் ரய்சி
இப்ராஹிம் ரய்சி

ஈரானில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தோ்தலில் போட்டியிடும் தலைமை நீதிபதி இப்ராஹிம் ரய்சி, மற்ற மூன்று வேட்பாளா்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வெற்றி பெறுவாா் என்று அரசு சாா்பு கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. சில நிபுணா்களும் இந்தக் கருத்தை அமோதித்துள்ளனா். தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட அவா் அதிபராகப் பொறுப்பேற்றால், சா்வதேச அணுசக்தி ஒப்பந்தம் போன்ற விவகாரங்களில் பின்னடைவு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.

அதிபா் தோ்தலில் தற்போதைய அதிபா் ஹஸசன் ரௌஹானியைப் போலவே மிதவாதியாக அறியப்படும் முன்னாள் மத்திய வங்கி தலைவா் அப்துல்நாசா் ஹெம்மாடியும் போட்டியிடுகிறாா். எனினும் அவருக்கு போதிய ஆதரவு இல்லை என்று கூறப்படுகிறது.

ரௌஹானியின் பதவிக் கால வரம்பு நிறைவடைந்துவிட்டதால் அவா் இந்தத் தோ்தலில் போட்டியிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com