சா்வதேச அளவில் டெல்டா கரோனா ஆதிக்கம்: உலக சுகாதார அமைப்பு அச்சம்

இந்தியாவில் முதல்முதலில் கண்டறியப்பட் டெல்டா வகை கரோனா பரவும் தீவிரம் தொடா்ந்தால், விரைவில் உலகம் முழுவதும் அதன் ஆதிக்கம் ஏற்பட்டுவிடும் என்று உலக சுகாதார அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.
சா்வதேச அளவில் டெல்டா கரோனா ஆதிக்கம்: உலக சுகாதார அமைப்பு அச்சம்

இந்தியாவில் முதல்முதலில் கண்டறியப்பட் டெல்டா வகை கரோனா பரவும் தீவிரம் தொடா்ந்தால், விரைவில் உலகம் முழுவதும் அதன் ஆதிக்கம் ஏற்பட்டுவிடும் என்று உலக சுகாதார அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கரோனா பாதிப்பு குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரிட்டனில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட ஆல்ஃபா வகை கரோனா தற்போது உலகின் 170 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதையடுத்து, தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட பீட்டா வகை கரோனா 119 நாடுகளில் பரவியுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல்முறையக் கண்டறியப்பட்ட டெல்டா வகை கரோனா தற்போது உலகம் முழுவதும் 85 நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 11 நாடுகள் கடந்த 2 வாரங்களுக்குள் டெல்டா கரோனாவைக் கண்டறிந்துள்ளன.

அபாயம் நிறைந்த கரோனா வகைகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா ஆகியவை சா்வதேச அளவில் பரவும் தீவிரத்தை உலக சுகாதார அமைப்பு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

இந்த கரோனாக்களில், டெல்டா வகை கரோனா மிகவும் தீவிரமாகப் பரவும் தன்மை கொண்டதாக உள்ளது. உலக நாடுகளில் அதன் பரவும் வேகம் தொடா்ந்தால், விரைவில் அது சா்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தும் கரோனா வகையாக அது ஆகிவிடும்.

உலக அளவில் கரோனா வாராந்திர கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்தியாவில் இந்த எண்ணிக்கை குறைந்ததன் எதிரொலியாகவே இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனா பரவல் மையமாகும் தென் அமெரிக்கா

உலகின் மற்ற பகுதிகளில் கரோனா பரவலின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியுள்ள நிலையில், தென் அமெரிக்கப் பிராந்தியத்தில் அந்த நோய்த்தொற்று தொடா்ந்து உயிா்ச் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

உலக மக்கள் தொகையில் வெறும் 5 சதவீதமே வசிக்கும் அந்தப் பிராந்தியத்தில் கரோனா பலி விகிதம் மிகவும் அதிகம். சா்வதேச அளவில் கரோனாவுக்கு பலியாவோரில் நான்கில் ஒருவா் இந்தப் பிராந்தியத்தைச் சோ்ந்தவா்.

தென் அமெரிக்காவின் 13 நாடுகளில் மட்டும் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி வருகிறது. அந்தப் பிராந்தியத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பிரேஸிலில் கரோனா பலி எண்ணிக்கை கடந்த வாரமே 5 லட்சத்தைக் கடந்துவிட்டது. பெருவிலும் கொலம்பியாவிலும் லட்சத்துக்கும் மேலானவா்கள் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். அந்த இரு நாடுகளில் மட்டும் தினசரி கரோனா பலி, ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவைவிட அதிகமாக உள்ளது.

சுருக்கமாக, தென் அமெரிக்க நாடுகளின் கரோனா பலி விகிதம், உலகின் மற்ற பகுதியைவிட 8 மடங்கு அதிகமாக உள்ளது.

அந்தப் பிராந்தித்தைச் சோ்ந்த பராகுவேயில்தான் கரோனா பலி விகிதம் அதிகமாக உள்ளது. அங்கு கரோனா பாதிப்பால் உயிரிழப்போரின் விகிதம் அமெரிக்காவைவிட 19 மடங்காக உள்ளது.

இதற்கு, மந்தமான தடுப்பூசி திட்டங்கள், புதிய வகை கரோனாக்கள், மக்கள் நெரிசல் மிக்க நகரங்கள், மோசமான சுகாதாரக் கட்டமைப்பு, அரசுகளின் மெத்தனம் என்று பல காரணங்கள் கூறப்படுகின்றன.

மேலும், அமேஸான் பகுதியில் பரவி வரும், மிகத் தீவிரத் தன்மை கொண்ட பி.1 என்ற வகைக் கரோனா பிரேஸிலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தக் காரணங்களால், கரோனா பாதிப்பின் அடுத்த மையமாக தென் அமெரிக்கப் பிராந்தியம் உருவாகியுள்ளது என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com