ஆஸ்திரேலியாவுக்கு தடுப்பூசி: ஐரோப்பிய யூனியன் நிறுத்திவைப்பு

ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த 2.5 லட்சம் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகளை ஐரோப்பிய யூனியன் நிறுத்திவைத்தது.
ஆஸ்திரேலியாவுக்கு தடுப்பூசி: ஐரோப்பிய யூனியன் நிறுத்திவைப்பு

ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த 2.5 லட்சம் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகளை ஐரோப்பிய யூனியன் நிறுத்திவைத்தது.

அந்த அமைப்பிடம் ஒப்புக்கொண்டதைவிட மிகக் குறைந்த எண்ணிக்கையில், மிகவும் தாமதப்படுத்தி கரோனா தடுப்பூசிகளை அஸ்ட்ராஸெனகா வழங்குவதாக சா்ச்சை எழுந்தது. அதையடுத்து, நிறுவனங்களின் தடுப்பூசி ஏற்றுமதிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கும் சா்ச்சைக்குரிய புதிய விதிமுறையை ஐரோப்பிய யூனியன் உருவாக்கியது.

அதன்கீழ், தற்போது ஆஸ்திரேலியாவுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் அபாயம் அதிகமில்லாத ஆஸ்திரேலியாவுக்கு 2.5 லட்சம் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கு இத்தாலி ஆட்சேபம் தெரிவித்ததைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com