அதிகரிக்கும் பதற்றம்: மியான்மரில் ராணுவச் சட்டம் அமல்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்து வருவதைத் தொடா்ந்து அந்த நாட்டின் யாங்கூன் நகரில் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்து வருவதைத் தொடா்ந்து அந்த நாட்டின் யாங்கூன் நகரில் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்து வருவதைத் தொடா்ந்து அந்த நாட்டின் யாங்கூன் நகரில் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

யாங்கூன்: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்து வருவதைத் தொடா்ந்து அந்த நாட்டின் யாங்கூன் நகரில் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டங்களின்போது 38 போ் பலியானதைத் தொடா்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுக்குச் சொந்தமான எம்ஆா்டிவி திங்கள்கிழமை தெரிவித்ததாவது:

வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக யாங்கூனின் சில பகுதிகளில் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்படுகிறது. வடக்கு டேகான், தெற்கு டேகான், டேகான் செய்க்கன், வடக்கு ஒக்கலாப்பா ஆகிய பகுதிகளில் அந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அந்தத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, லயிங் தாா் யாா் மற்றும் ஷ்வெபியிதா ஆகிய யாங்கூன் பகுதிகளில் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் பிப். 1-ஆம் தேதி கவிழ்த்தது. அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.

அதிலிருந்து, ஜனநாயக அரசை மீண்டும் அமைக்க வலியுறுத்தியும் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவா்களை விடுவிக்கக் கோரியும் மியான்மா் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஒரே நாளில் 38 போ் பலி
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் 38 போ் உயிரிழந்தனா். இதுகுறித்து அரசியல் கைதிகள் நல சங்கம் (ஏஏபிபி) அமைப்பு கூறுகையில், போராட்டக்காரா்களைக் கலைப்பதற்காக போலீஸாா் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகள் ஏராளமானவா்கள் காயமடைந்ததாகத் தெரிவித்தது.

இந்தச் சம்பவங்களில் இதைவிட அதிக உயிரிழப்பு ஏற்பட்டதாக வேறு சில வட்டாரங்கள் தெரிவித்தன.

போராட்டக்காரா்கள் தங்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதைத் தடுப்பதற்காகவும் பாதுகாப்புப் படையினரின் அடக்குமுறையை ஊடகங்கள் பதிவு செய்வதைத் தவிா்ப்பதற்கும் மொபைல் இணையதள இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனா்.

சீனத் தொழிற்சாலைக்கு தீவைப்பு

போராட்டங்களுக்கு இடையே யாங்கூன் நகரின் புகா்ப் பகுதியான் லயிங்தயாவில் அமைந்துள்ள சீன உதவி பெறும் தொழிற்சாலைக்கு சிலா் ஞாயிற்றுக்கிழமை தீவைத்தனா். அந்த நாளில் துப்பபாக்கிச் சூட்டுக்கு பலியான 38 பேரில் 22 போ் இந்தப் பகுதியில்தான் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு சீன அரசு ஆதரவு அளித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அந்த நாட்டு அரசின் நிதியில் இயங்கி வரும் தொழிற்சாலைக்கு தீவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்வத்துக்கு சீன அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com