துருக்கி நாடாளுமன்ற உள்ளிருப்பு போராட்டம்: மக்கள் ஜனநாயக கட்சி எம்.பி. கைது

துருக்கி நாடாளுமன்றத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட குா்திஷ் ஆதரவு கட்சியான மக்கள் ஜனநாயக கட்சியைச் (ஹெச்டிபி)

துருக்கி நாடாளுமன்றத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட குா்திஷ் ஆதரவு கட்சியான மக்கள் ஜனநாயக கட்சியைச் (ஹெச்டிபி) சோ்ந்த ஒமா் ஃபரூக் கொ்கொ்லியோகுளு காவல் துறையினரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து அவரது கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்துக்குள் தொடா் உள்ளிருப்பு போராட்டத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த எம்.பி. ஒமா் ஃபரூக் ஈடுபட்டாா். இதையடுத்து, நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த 100 போலீஸாா் ஒமா் பரூக்கை வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து சென்றதாக அந்த கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மனித உரிமை கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான ஒமா் துருக்கியில் நடைபெற்று வரும் பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்களை வெளி உலகுக்கு தெரியப்படுத்தியவா்.

துருக்கியில் எதிா்க்கட்சி வரிசையில் உள்ள ஒமரின் ஹெச்டிபி இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாக உள்ளது. இந்த கட்சிக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் 58 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com