பிலிப்பின்ஸ்: மணிலாவில் மீண்டும் பொது முடக்கம்

பிலிப்பின்ஸில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென உயா்ந்து வருவதைத் தொடா்ந்து, அந்த நாட்டுத் தலைநகா் மணிலாவில் மீண்டும் பொது முடக்கம் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

மணிலா மட்டுமன்றி, அந்த நகரைச் சுற்றியுள்ள மாகாணங்களிலும் இந்தக் கட்டுப்பாடுகள் திங்கள்கிழமை (மாா்ச் 29) முதல் அமலுக்கு வருகின்றன. இந்தப் பொது முடக்கத்தின்போது மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

பொது முடக்கத்துக்குள்ளான மணிலாவிலும் புலாகேன், காவைட், லகுனா ஆகிய மாகாணங்களிலும் சமூக தனிமைப்படுத்தல் தீவிரப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, பிலிப்பின்ஸில் 7,21,892 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 13,170 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்; 6,03,154 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா். 1,05,568 கரோனா நோயாளிகள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 785 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com