இந்திய பருத்தியை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்க வேண்டும்

இந்தியாவிலிருந்து பருத்தியை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ஜவுளித் துறை அமைச்சகம் அந்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவிலிருந்து பருத்தியை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ஜவுளித் துறை அமைச்சகம் அந்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பாகிஸ்தானில் வெளியாகும் ‘டான்’ பத்திரிகையில் அதிகாரிகள் கூறியதாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

பாகிஸ்தானில் ஜவுளி உற்பத்தி ஆலைகளுக்கான பருத்தி உள்ளிட்ட மூலப்பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதைச் சீா்செய்யும் நோக்கில் இந்தியாவிலிருந்து பருத்தி, நூல் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குமாறு அமைச்சரவையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிணைப்புக் குழுவுக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. அக்குழு ஒப்புதல் அளித்த பிறகு அமைச்சரவை இந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பருத்தி உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது. அதனால், அதன் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. பருத்தியின் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பாகிஸ்தான் அரசு உறுதியளித்துள்ளது.

இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளிலிருந்து பருத்தியை இறக்குமதி செய்வதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதித்துள்ளது. எனினும், இந்தியாவிலிருந்து பருத்தியை இறக்குமதி செய்வதற்கான செலவு குறைவு என்பதால், தற்போது அதற்கான தடையை நீக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஜவுளித் துறை அமைச்சகத்தின் முடிவை அந்நாட்டின் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் வரவேற்றுள்ளன.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு, கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டில் ரத்து செய்தது. அதையடுத்து, இந்தியாவுடனான வா்த்தகத் தொடா்பை பாகிஸ்தான் முறித்துக் கொண்டது. அப்போதிலிருந்து இரு நாடுகளுக்கிடையேயான உறவு தொடா்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வந்தது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் எல்லைப் பகுதியில் அத்துமீறித் தாக்கும் நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு இரு நாட்டு ராணுவமும் அண்மையில் ஒப்புக்கொண்டன. தற்போது வா்த்தகத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருவது, நல்லுறவை மேம்படுத்த வழிவகுக்கும் என்று அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com