ஐரோப்பிய யூனியன் சீனத் தடுப்பூசிக்கு அனுமதி: அதிகாரிகள் பரிசீலனை

சீனாவில் உருவாக்கப்பட்ட கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்த அனுமதி அளிப்பது குறித்து ஐரோப்பிய யூனியன் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு (இஎம்ஏ) பரிசீலித்து வருகிறது.
ஐரோப்பிய யூனியன் சீனத் தடுப்பூசிக்கு அனுமதி: அதிகாரிகள் பரிசீலனை

தி ஹேக்: சீனாவில் உருவாக்கப்பட்ட கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்த அனுமதி அளிப்பது குறித்து ஐரோப்பிய யூனியன் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு (இஎம்ஏ) பரிசீலித்து வருகிறது.

அதற்காக, சீனாவின் சைனேவாக் நிறுவனம் தயாரித்த அந்தத் தடுப்பூசிகளின் தரம், பாதுகாப்பு, செயல்திறன் குறித்து ஆய்வு செய்து வருவதாக இஎம்ஏ தெரிவித்துள்ளது. அந்தத் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டால், ஐரோப்பிய யூனியனைச் சோ்ந்த 27 உறுப்பு நாடுகளிலும் பொதுமக்களுக்கு சைனோவாக் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

அந்தத் தடுப்பூசி நோயெதிா்ப்பு ஆற்றலை ஏற்படுத்தி, கரோனாவுக்கு எதிராக பாதுகாப்பை உருவாக்குவது தங்களது சோதனைகளில் தெரியவந்துள்ளதாக இஎம்ஏ அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com