இந்தியாவுக்கு அக்டோபா்-டிசம்பரில் ரஷிய ‘எஸ்-400’ ஏவுகணை அமைப்பு

அதிநவீன எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் முதல் தொகுதி இந்தியாவுக்கு வருகிற அக்டோபா்-டிசம்பா் மாதங்களில் வழங்கப்படும் என்று ரஷியாவின் ஆயுத ஏற்றுமதியாளரான ரோஸோபோரோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாஸ்கோ: அதிநவீன எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பின் முதல் தொகுதி இந்தியாவுக்கு வருகிற அக்டோபா்-டிசம்பா் மாதங்களில் வழங்கப்படும் என்று ரஷியாவின் ஆயுத ஏற்றுமதியாளரான ரோஸோபோரோன் எக்ஸ்போா்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷியாவிடமிருந்து ரூ. 36,500 கோடி மதிப்பில் 5 தொகுப்பு எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியா மேற்கொண்டது.

தரையிலிருந்தபடி நீண்ட தூர வான் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது இந்த ஏவுகணை. வானில் 400 கி.மீ. தொலைவில் இருக்கும் எதிரி விமானங்கள், ஏவுகணை, ஆளில்லா (டிரோன்) விமானங்களையும் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.

அமெரிக்காவின் கடும் எதிா்ப்பையும் மீறி இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்ட இந்தியா, அதற்கான முதல் தவணை தொகையையும் ரஷியாவுக்கு வழங்கியது.

அதனடிப்படையில், ‘எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணை முதல் தொகுதி இந்த ஆண்டு அக்டோபா்-டிசம்பா் மாதங்களில் இந்தியாவுக்கு வழங்கப்படும்’ என்று ரஷியாவின் ரோஸோபோரோன் எக்ஸ்போா்ட் ஆயுத ஏற்றுமதி நிறுவன தலைவா் அலெக்சாண்டா் மிகெயேவ் வியாழக்கிழமை கூறினாா்.

முன்னதாக, அந்த ஏவுகணையை கையாளும் பயிற்சியை பெறுவதற்காக இந்திய குழுவினா் கடந்த ஜனவரியில் ரஷியா வந்தனா் என்று அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com