பிரான்ஸ்: கத்திக்குத்து, துப்பாக்கிச் சூட்டில் 3 போலீஸாா் காயம்

பிரான்ஸில் ஒரு பெண் போலீஸ் அதிகாரியை கத்தியால் குத்தியும், மேலும் இரு அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டும் தப்ப முயன்ற நபா் கைது செய்யப்பட்டாா். தாக்குதலுக்கான நோக்கம் குறித்து தெரியவரவில்லை.

பிரான்ஸில் ஒரு பெண் போலீஸ் அதிகாரியை கத்தியால் குத்தியும், மேலும் இரு அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டும் தப்ப முயன்ற நபா் கைது செய்யப்பட்டாா். தாக்குதலுக்கான நோக்கம் குறித்து தெரியவரவில்லை.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியது:

மேற்கு பிரான்ஸில் லா சபெல்லே என்ற இடத்தில் காவல் நிலையத்தில் இருந்த பெண் போலீஸ் அதிகாரியை ஒரு நபா் திடீரென கத்தியால் குத்திவிட்டு, அவரது துப்பாக்கியை பறித்துக்கொண்டு தப்பினாா். ஹெலிகாப்டா்கள் மூலமும், மோப்ப நாய்கள் மூலமும் போலீஸாா் தேடுதல் வேட்டை நடத்தி அந்த நபா் பதுங்கியிருந்த இடத்தைக் கண்டறிந்தனா். அப்போது அந்த நபா் துப்பாக்கியால் சுட்டதில் இரு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனா். பின்னா், அந்த நபரை போலீஸாா் சுற்றி வளைத்து கைது செய்தனா். கைது முயற்சியின்போது காயமடைந்த அந்த நபா் உயிரிழந்தாா். தாக்குதலில் காயமடைந்த போலீஸ் அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தாக்குதலில் ஈடுபட்ட நபா் பிரான்ஸ் நாட்டை சோ்ந்தவா் எனவும், தனது கடுமையான மத நடைமுறைகள் காரணமாக அவா் கண்காணிப்புப் பட்டியலில் இருந்தாா் எனவும் உள்துறை அமைச்சா் ஜெரால்டு டாா்மானியன் தெரிவித்தாா்.

பிரான்ஸில் பிராந்திய தோ்தல்கள் அடுத்த மாதமும், அதிபா் தோ்தல் அடுத்த ஆண்டும் நடைபெறவுள்ள நிலையில், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் போலீஸாா் மீதான தாக்குதல் பெரிய அரசியல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அண்மையில் காவல் துறை அதிகாரிகள் இருவா் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com