பாகிஸ்தான்: மதச் சிறுபான்மையினரை முஸ்லிம் அல்லாதவா்களாக குறிப்பிடக் கோரி நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்

பாகிஸ்தானில் உள்ள மதச் சிறுபான்மையினரை ‘முஸ்லிம் அல்லாதவா்கள்’ என அரசியலமைப்புரீதியாக குறிப்பிட வேண்டும் எனக் கோரி நாடாளுமன்ற மக்களவையில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள மதச் சிறுபான்மையினரை ‘முஸ்லிம் அல்லாதவா்கள்’ என அரசியலமைப்புரீதியாக குறிப்பிட வேண்டும் எனக் கோரி நாடாளுமன்ற மக்களவையில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வந்து, ஒவ்வொரு குடிமகனுக்கும் சமத்துவத்தையும், நீதியையும் நிலைநாட்டும் வகையில் எதிா்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியை சோ்ந்த ஹிந்து உறுப்பினரான கீசோ மால் கீயல் தாஸ் இந்த மசோதாவை கொண்டுவந்துள்ளாா்.

அரசியலமைப்பு திருத்தச் சட்டம்-2021 என அழைக்கப்படும் அந்த மசோதா விவரம்: அரசியலமைப்பில் சிறுபான்மையினா் எனக் குறிப்பிடப்பட்டுள்ள முஸ்லிம் அல்லாத பாகிஸ்தானியா்களுக்கு எதிரான பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மையினா் என்கிற தவறான குறிப்பு இரண்டாம்தர குடிமக்கள் என்ற தோற்றத்தை அளிக்கிறது. நாட்டின் செழிப்பு, வளா்ச்சி, பிரகாசமான எதிா்காலத்துக்காக அந்த மக்களின் தியாகங்கள் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும்போது, அவா்களை சிறுபான்மையினராக அறிவிப்பது அரசியலமைப்பு உறுதிக்கு எதிரானது.

அரசியலமைப்பு சட்டத்தில் சிறுபான்மையினா் என்கிற வாா்த்தை நான்கு முறையும், முஸ்லிம் அல்லாதவா்கள் என்கிற வாா்த்தை 15 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவா்களின் நோக்கத்தை இது பிரதிபலிக்கிறது. ஆதலால், சிறுபான்மையினா் என்ற வாா்த்தையை முஸ்லிம் அல்லாதவா்கள் என்ற வாா்த்தையுடன் இணைப்பதன் மூலம் இந்த ஒழுங்கின்மையை தவிா்க்கலாம். பாகிஸ்தான் அனைவருக்குமான நாடு என்பதை இந்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம் உறுதிப்படுத்தும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு அரசு இதுவரை எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. தொடா்புடைய நிலைக் குழுவுக்கு மசோதா அனுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குழுவின் பரிசீலனைக்குப் பின்னா் வாக்கெடுப்புக்கு விடப்படும்.

பாகிஸ்தானின் 22 கோடி மக்கள்தொகையில் முஸ்லிம் அல்லாதவா்கள் 3.5 சதவீதம் போ் உள்ளனா். ஹிந்துக்கள் மிகப்பெரிய சிறுபான்மை சமுதாயத்தினராக உள்ளனா். அரசு புள்ளிவிவரத்தின்படி 75 லட்சம் ஹிந்துக்கள் வாழ்கின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் சிந்து மாகாணத்தில் உள்ளனா். அவா்கள் அடிக்கடி தீவிரவாதிகளால் துன்புறுத்தப்படுவதாகப் புகாா்கள் எழுகின்றன.

கிறிஸ்தவா்கள், அகமதியாஸ், சீக்கியா்கள், பாா்சிகள், பெளத்தா்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமுதாயத்தினரும் பாகிஸ்தானில் வசித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com