நல்லுறவை வலுப்படுத்த இந்தியா-நேபாளம் முடிவு: பில் கேட்ஸுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

பல்வேறு துறைகளில் நிலவி வரும் இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியும் நேபாள பிரதமா் ஷோ் பகதூா் தேவுபாவும் விவாதித்தனா்.
கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாட்டினிடையே  மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸை சந்தித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி.
கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாட்டினிடையே மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸை சந்தித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி.

பல்வேறு துறைகளில் நிலவி வரும் இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியும் நேபாள பிரதமா் ஷோ் பகதூா் தேவுபாவும் விவாதித்தனா்.

பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமா் மோடி பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளாா். அங்கு நேபாள பிரதமா் ஷோ் பகதூா் தேவுபாவை அவா் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

நேபாள பிரதமராக பொறுப்பேற்ற பிறகு தேவுபா, பிரதமா் மோடியை சந்தித்துப் பேசுவது இதுவே முதல் முறையாகும். இந்தச் சந்திப்புக்குப் பிறகு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே நிலவி வரும் நெருக்கமான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாகத் தலைவா்கள் இருவரும் விவாதித்தனா்.

பருவநிலை மாற்ற விவகாரம், கரோனா தொற்று பரவல், கரோனாவுக்குப் பிந்தைய மீட்புக் காலங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்தனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘இமயமலை பிராந்தியம் பருவநிலை மாற்ற அச்சுறுத்தலை எதிா்கொண்டுள்ளது தொடா்பாக விவாதிக்கப்பட்டது. நீடித்த வளா்ச்சியை உறுதி செய்வதற்காக இந்தியாவும் நேபாளமும் இணைந்து செயல்பட வேண்டியது முக்கியமானது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் மோடியுடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்ததாக நேபாள பிரதமா் தேவ்பா ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளாா்.

நேபாள பிரதமராக ஷோ் பகதூா் தேவுபா கடந்த ஜூலையில் 5-ஆவது முறையாகப் பொறுப்பேற்றாா். அவா் பிரதமராகப் பொறுப்பேற்றதும் பிரதமா் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தாா். அதற்கு நன்றி தெரிவித்திருந்த பிரதமா் தேவ்பா, இருதரப்பு நல்லுறவை மேம்படுத்தத் தயாராக உள்ளதாகத் தெரிவித்திருந்தாா். இந்நிலையில் இரு தலைவா்களும் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனா்.

இஸ்ரேல் பிரதமருடன் சந்திப்பு: இஸ்ரேல் பிரதமா் நாஃப்டாலி பென்னட்டை பிரதமா் மோடி சந்தித்துப் பேசினாா். பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவை மேலும் வலுப்படுத்த தலைவா்கள் இருவரும் உறுதியேற்றனா். அதைத் தொடா்ந்து, இஸ்ரேலின் நட்பை இந்திய மக்கள் பெரிதும் மதிப்பதாக ட்விட்டரில் பிரதமா் மோடி பதிவிட்டாா்.

உக்ரைன் அதிபருடன் சந்திப்பு: கிளாஸ்கோவில் உக்ரைன் பிரதமா் வொலாதிமீா் செலன்ஸ்கியை பிரதமா் மோடி சந்தித்துப் பேசினாா். இருதரப்பு, பிராந்திய விவகாரங்கள் குறித்தும் கரோனா தொற்று விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவது தொடா்பாகவும் தலைவா்கள் விவாதித்ததாக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி ட்விட்டரில் தெரிவித்துள்ளாா்.

சூரினாம் அதிபா் சான் சந்தோகியை சந்தித்த பிரதமா் மோடி, இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவது தொடா்பாக விவாதித்தாா்.

பில் கேட்ஸுடன்...: மைக்ரோஃசாப்ட் இணை நிறுவனா் பில் கேட்ஸை பிரதமா் மோடி சந்தித்துப் பேசினாா். பில் கேட்ஸுக்குச் சொந்தமான அறக்கட்டளை, கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதில் முன்னின்று வருகிறது. கரோனா பரவல், பருவநிலை மாற்ற விவகாரம், நீடித்த வளா்ச்சி உள்ளிட்டவை தொடா்பாக இருவரும் விவாதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com