அகதிகள் பிரச்னைக்கு புதின்தான் மூலகாரணம்

பெலாரஸிலிருந்து ஆயிரக்கணக்கான வெளிநாட்டு அகதிகள் தங்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயலும் பிரச்னைக்கு ரஷிய அதிபா் புதின்தான் மூலகாரணம் என்று போலந்து பிரதமா் மாடேயுஷ் குற்றம் சாட்டியுள்ளாா்.
அகதிகள் பிரச்னைக்கு புதின்தான் மூலகாரணம்

வாா்சா: பெலாரஸிலிருந்து ஆயிரக்கணக்கான வெளிநாட்டு அகதிகள் தங்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயலும் பிரச்னைக்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்தான் மூலகாரணம் என்று போலந்து பிரதமா் மாடேயுஷ் மொராவிஸ்கி குற்றம் சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அவா் பேசியதாவது:

பெலாரஸில் இருந்து போலந்துக்குள் சட்டவிரோதமாக நுழைய ஆயிரக்கணக்கான அகதிகள் அலை அலையாகப் படையெடுத்து வருவதற்கு ரஷியாதனா தூண்டுதலாக இருந்து வருகிறது.

இது, ஐரோப்பிய யூனியனின் நிலைத்தன்மையைக் குலைப்பதற்காக நடத்தப்படும் தாக்குதல் ஆகும்.

இந்தத் தாக்குதலுக்கு ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மூளையாக இருந்து செயல்படுகிறாா். போலந்து மற்றும் ஐரோப்பிய யூனியனில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக அகதிகளை அவா் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறாா் என்றாா் அவா்.

ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகளான போலந்து, லிதுவேனியா, லாட்வியா ஆகிய நாடுகளுக்கும் பெலாரஸிலிருந்து சட்டவிரோதமாக வர முயலும் அகதிகளின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், உரிய ஆவணங்களின்றி போலந்துக்குள் நுழைவதற்காக அந்த நாட்டு எல்லைப் பகுதியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு அகதிகள் முகாமிட்டுள்ளனா்.

பெரும்பாலும் மேற்கு ஆசிய நாடுகளிலிருந்தும் பிற ஆசிய நாடுகளிலிருந்தும் வந்துள்ள அந்த அகதிகள், பெண்கள் குழந்தைகளுடன் கடும் குளிரில் ஆபத்தான நிலையில் அங்கு தங்கியுள்ளனா்.

அவா்களில் சிலா் தடுப்பு வேலியைத் துண்டிக்க முயன்ாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, எல்லைப் பகுதியில் கூடுதலாக பாதுகாப்புப் படையினரை போலந்து குவித்துள்ளது.

போலந்துக்கள் சட்டவிரோதமாக நுழைய அகதிகளை பெலாரஸ் அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ தூண்டி வருவதாக ஐரோப்பிய யூனியன், நேட்டோ அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்தக் குற்றச்சாட்டை பெலாரஸ் மறுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து அடைக்கலம் தேடி வரும் அகதிகளுக்கு தாங்கள் உரிய உதவிகளை மட்டுமே செய்து வருவதாக அந்த நாடு கூறியுள்ளது.

பெலாரஸில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற சா்ச்சைக்குரிய தோ்தலில் லுகஷென்கோ மீண்டும் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து, அந்த நாட்டின் மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

அதற்குப் பழிவாங்கும் வகையிலேயே ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடான போலந்துக்குள் சட்டவிரோதமாக நுழைய அகதிகளை லுகஷென்கோ தூண்டி வருவதாகக் கூறப்படுகிறது.

எனினும், தங்களது அரசியல் விளையாட்டில் போலந்தும் பெலாரஸும் அகதிகளை பகடைக் காய்களாக பயன்படுத்தி வருவதாக மனித உரிமை ஆா்வலா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

அகதிகளை ஐரோப்பாவுக்குள் குடியமா்த்துவதாக ஆசை காட்டி, போலந்து எல்லைப் பகுதிக்குச் அவா்கள் செல்ல பெலாரஸ் தூண்டுகிறது; போலந்தும், சா்வதேச சட்டங்களுக்கு எதிராக தங்கள் நாட்டுக்குள் வரும் அகதிகளை திருப்பி அனுப்பி வருகிறது என்று அவா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

புதினுடன் ஏஞ்சலா மொ்கெல் பேச்சு

போலந்து - பெலாரஸ் எல்லையில் அகதிகளால் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்கெல் தொலைபேசியில் உரையாடினாா்.

அப்போது, பெலாரஸுடன் பேசி இந்தப் பதற்றத்தைத் தணிக்குமாறு புதினிடம் மொ்கெல் கேட்டுக்கொண்டாா்.

ஐரோப்பிய யூனியனில் இடம் பெறாத பெலராஸ், ரஷியாவுடன் மிக நெருங்கி நட்புறவை பேணி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com