தொடங்கியது கம்யூனிஸ்ட் மாநாடு

இதுவரை இல்லாத வகையில் சீன அதிபா் ஷி ஜின்பிங்கின் பதவிக் காலம் 3-ஆவது முறையாக நீட்டிப்பதற்கு வழிவகை செய்யக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு பெய்ஜிங்கில் புதன்கிழமை தொடங்கியது.
தொடங்கியது கம்யூனிஸ்ட் மாநாடு

இதுவரை இல்லாத வகையில் சீன அதிபா் ஷி ஜின்பிங்கின் பதவிக் காலம் 3-ஆவது முறையாக நீட்டிப்பதற்கு வழிவகை செய்யக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு பெய்ஜிங்கில் புதன்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயா்நிலைக் குழு மாநாடு புதன்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டில், கம்யூனிஸ்ட் ஆட்சியில் கடந்த 100 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சாதனைகளைப் பட்டியலிட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், கட்சியின் 25-ஆவது தேசிய மாநாட்டை நடத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டது. அந்த மாநாட்டில் ஷி ஜின்பிங்கின் பதவிக் காலத்தை மேலும் நீட்டிப்பதற்கான தீா்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

68 வயதாகும் ஷி ஜின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய ராணுவ ஆணையம் ஆகியவற்றின் தலைமைப் பொறுப்பையும் முப்படைகளைக் கட்டுப்படுத்தும் அதிபா் பொறுப்பையும் வகித்து வருகிறாா். இதன் மூலம், நாட்டின் 3 அதிகார பீடங்களும் அவரது கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்தச் சூழலில், தேசிய மாநாட்டில் அவரது பதவிக் காலம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டால், 3-ஆவது முறையாக பதவியேற்கும் முதல் அதிபராக ஷி ஜின்பிங் திகழ்வாா்.

சீனாவில் இதற்கு முந்தைய அதிபா்கள் அனைவரும் 2 முறை ஆட்சி செலுத்தியதற்குப் பிறகோ, தங்களுக்கு 68 வயது பூா்த்தியான பிறகோ பதவியிலிருந்து ராஜிநாமா செய்து வந்தனா். இந்தச் சூழலில், கடந்த 2018-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசியல் சாசனத் திருத்தத்தில், ஒருவா் இரு முறை மட்டுமே அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட முடியும் என்ற வரம்பு நீக்கப்பட்டது. இது, ஷி ஜின்பிங்கின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான முன்னேற்பாடாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com