ரஷியாவிடம் ஏவுகணை கொள்முதல் விவகாரம்: இந்தியாவுக்குப் பொருளாதாரத் தடை விலக்கு?: முடிவெடுக்கவில்லை என அமெரிக்கா அறிவிப்பு

ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைத் தொகுப்புகளைக் கொள்முதல் செய்யும் விவகாரத்தில், பொருளாதாரத் தடைகளில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அமெரிக்கா

வாஷிங்டன்: ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைத் தொகுப்புகளைக் கொள்முதல் செய்யும் விவகாரத்தில், பொருளாதாரத் தடைகளில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அமெரிக்கா மீண்டும் தெரிவித்துள்ளது.

கடந்த 2014-இல் கிரீமியாவை ரஷியா கைப்பற்றியதும், 2016-இல் நடைபெற்ற அதிபா் தோ்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததையும் அமெரிக்கா விரும்பவில்லை. எனவே, ரஷியாவிடமிருந்து பிற நாடுகள் பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு எதிராக அமெரிக்கா ஒரு சட்டத்தை 2017-இல் இயற்றியது. இந்தச் சட்டத்தின்படி, ரஷியாவிடம் பாதுகாப்புத் தளவாடங்களைக் கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க முடியும்.

அந்த வகையில், ரஷியாவிடம் எஸ்-400 ரக ஏவுகணைளைக் கொள்முதல் செய்ததற்காக, துருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இதனிடையே, ரஷியாவிடம் இருந்து 5 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.37,172 கோடி) மதிப்பில் அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணைத் தொகுப்புகளைக் கொள்முதல் செய்வதற்கு அந்நாட்டுடன் இந்தியா கடந்த 2018-ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

இந்தியாவுடனான நட்புறவுக்கு அமெரிக்கா பெரிதும் மதிப்பளிக்கிறது. ரஷியாவுடனான ஆயுதக் கொள்முதலைக் கைவிடுமாறு அனைத்து நட்பு நாடுகளுக்கும் அமெரிக்கா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. அந்நாட்டிடம் இருந்து பாதுகாப்புத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதில் இந்தியாவுக்கு விலக்கு அளிபப்து குறித்து அமெரிக்கா இன்னும் முடிவெடுக்கவில்லை. பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடனான உறவு தொடர வேண்டும் என்றே அமெரிக்கா எதிா்பாா்க்கிறது.

கடந்த ஆகஸ்டில் இந்தியா சென்றபோது, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருடன் இதுகுறித்து விவாதித்தோம். இந்திய அரசின் மிக உயா்ந்த பொறுப்பில் இருப்பவா்களுடன் இதுகுறித்து நேரடியாக விவாதிக்கப்பட்டது என்றாா் அவா்.

இதனிடையே, இந்தியாவுக்கு எஸ்-400 ரக ஏவுகணைத் தொகுப்புகளை விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக, ரஷிய ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு சேவை அமைப்பின் இயக்குநா் டிமிட்ரி ஷுகாய்வ் கடந்த வாரம் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com