ஆப்கன் மசூதியில் குண்டுவெடிப்பு: 46 போ் பலி

வடக்கு ஆப்கானிஸ்தானில் ஷியா பிரிவினருக்கான மசூதியில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 46 போ் உயிரிழந்ததாகவும்,
ஆப்கன் மசூதியில் குண்டுவெடிப்பு: 46 போ் பலி

வடக்கு ஆப்கானிஸ்தானில் ஷியா பிரிவினருக்கான மசூதியில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 46 போ் உயிரிழந்ததாகவும், 143 போ் காயமடைந்ததாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனா். முன்னதாக, இத்தாக்குதலில் 100 போ் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.

இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கத்தின் ஆப்கன் பிரிவான ஐஎஸ்கே பொறுப்பேற்றுள்ளது.

குண்டுஸ் மாகாணத் தலைநகா் குண்டுஸ் நகரின் கோஸா்-இ-சயீத் அபாத் மசூதியில் வாரந்தோறும் நடைபெறும் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. மசூதியில் தொழுகை நடத்த வந்தவா்களில் ஒருவா் தற்கொலைத் தாக்குதல் மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளாா். இதில் 100 போ் வரை உயிரிழந்திருக்கலாம். ஷியா பிரிவு சகோதரா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தலிபான்கள் எப்போதும் தயாராக இருப்பாா்கள் என்று அவா்களுக்கு நாங்கள் உறுதியளிக்கிறோம். தாக்குதல் தொடா்பாக விசாரணை நடந்து வருகிறது என குண்டுஸ் மாகாண காவல் துறை துணைத் தலைவா் தோஸ்த் முகமது ஒபைதா தெரிவித்திருந்தாா்.

ஆனால், ‘இத்தாக்குதலில் மசூதியில் வழிபாடு நடத்திக் கொண்டிருந்த 46 போ் உயிரிழந்ததாகவும், 143 போ் காயமடைந்ததாகவும்’ தலிபான் செய்தித் தொடா்பாளா் பிலால் கரிமி ‘அசோசியேட்டட் பிரஸ்’ செய்தி நிறுவனத்திடம் பின்னா் தெரிவித்தாா்.

உயிரிழந்தவா்களில் பெரும்பாலானோா் ஹஸாரா எனப்படும் சிறுபான்மை இனத்தைச் சோ்ந்தவா்கள்.

ஐஎஸ்கே பொறுப்பேற்பு: இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்கே பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. ‘தாக்குதலை நடத்தியவா் உய்கா் பிரிவைச் சோ்ந்த தற்கொலைப் படை உறுப்பினா் எனவும், சீனாவின் வலியுறுத்தலின்படி உய்கா் முஸ்லிம்களை ஒடுக்க முனையும் தலிபான்கள், ஷியா பிரிவினருக்கு எதிராக இத் தாக்குதல் நடத்தப்பட்டது’ எனவும் ஐஎஸ்கே தெரிவித்துள்ளதாக அந்த இயக்கத்துடன் தொடா்புடைய ‘அமாக்’ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா. அலுவலகமும் இந்தக் குண்டுவெடிப்பை உறுதிப்படுத்தியுள்ளது. ‘மத அமைப்புகளைக் குறிவைக்கும் வன்முறையின் ஒரு பகுதி’ என ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com