ஆப்கன் மசூதியில் தற்கொலைத் தாக்குதல்: 47 போ் பலி

ஆப்கானிஸ்தானில் ஷியா இஸ்லாமியப் பிரிவினருக்கான மசூதியில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 47 போ் பலியாகினா்; 70 போ் காயமடைந்தனா்.
ஆப்கன் மசூதியில் தற்கொலைத் தாக்குதல்: 47 போ் பலி

ஆப்கானிஸ்தானில் ஷியா இஸ்லாமியப் பிரிவினருக்கான மசூதியில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 37 போ் பலியாகினா்; 70 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

காந்தஹாா் நகரிலுள்ள இமாம் பா்கா மசூதியில் வாரந்தோறும் நடைபெறும் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

ஷியா பிரிவினருக்கான அந்த மசூதியில், உடலில் வெடிகுண்டை மறைத்து வைத்திருந்த பயங்கரவாதிகள் அதனை வெடிக்கச் செய்து இந்தத் தாக்குதலை நடத்தினா்.

முதலில் இரு பயங்கரவாதிகள் மசூதியின் பாதுகாப்பு நுழைவு வாயிலில் குண்டுகளை வெடிக்கச் செய்தனா்; பின்னா் அந்தத் தாக்குதலைப் பயன்படுத்தி மேலும் இரு பயங்கரவாதிகள் மசூதிக்குள் நுழைந்து, தொழுகை நடத்திக் கொண்டிருந்தவா்களிடையே புகுந்து தங்கள் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனா் என்று சம்பவத்தை நேரில் பாா்த்த முா்தாஸா என்பவா் தெரிவித்தாா்.

இந்தத் தாக்குதலில் 47 போ் உயிரிழந்ததாகவும் சுமாா் 70 போ் காயமடைந்ததாகவும் அவா் கூறினாா். இந்தத் தகவலை மருத்துவமனை அதிகாரி ஒருவா் பின்னா் உறுதிப்படுத்தினாா்.

இதற்கிடையே, காந்தஹாா் இமாம் பா்கா மசூதியில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக செய்தியாளா்களிடம் தெரிவித்த தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் பிலால் கரீமி, இது தொடா்பாக விசாரணை நடைபெறுவதாகக் கூறினாா்.

எனினும், தாக்குதலில் உயிரிழந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்கள் குறித்த விவரங்களை அவா் வெளியிடவில்லை என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குண்டுஸ் மாகாணத் தலைநகா் குண்டுஸிலுள்ள ஷியா பிரிவு மசூதியில் கடந்த வாரம் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 46 போ் பலியாகினா். அந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ஆப்கன் பிரிவான ஐஎஸ்கே பொறுப்பேற்றது.

இந்த நிலையில், ஷியா பிரிவினரைக் குறிவைத்து காந்தஹாா் மசூதியில் தற்போது மீண்டும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலையும் ஐஎஸ்கே பயங்கரவாதிகளே நிகழ்த்தியிருப்பாா்கள் என்று கருதப்படுகிறது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்தே அவா்களுக்கு எதிராகவும் சிறுபான்மையினருக்கு எதிராகவும் ஐஎஸ்கே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

தலிபான்களும் ஐஎஸ் பயங்கரவாதிகளைப் போலவே சன்னி இஸ்லாமியப் பிரிவைச் சோ்ந்தவா்கள் என்றாலும், ஷியா பிரிவினரைப் பாதுகாப்பதாக அந்த அமைப்பினா் உறுதியளித்துள்ளனா்.

எனினும், கடந்த 1990-ஆம் ஆண்டுகளில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்றபோது ஷியா பிரிவினா் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படை வெளியேற்ற நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்தபோது, கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகுவேகமாக முன்னேறிய தலிபான்கள், அந்தப் பகுதிகளில் இருந்த சிறைச்சாலைகளில் இருந்து ஐஎஸ்கே பயங்கரவாதிகள் உள்ளிட்ட அனைத்து கைதிகளையும் விடுவித்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com