கோப்புப்படம்
கோப்புப்படம்

சிங்கப்பூரில் நிலவும் அசாதாரணமான சூழல்; 5,000த்தை தாண்டிய தினசரி கரோனா பாதிப்பு

கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் அடுத்து வரும் நாட்கள் முக்கியமானவை என்பதால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

பல்வேறு நாடுகளில் கடுமையான கரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்துவருகிறது. இதன் காரணமாக, வைரஸ் பரவலும் கட்டுக்குள் இருந்துவருகிறது. அந்த வகையில்தான், சிங்கப்பூரில் கரோனா பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வந்தது.

முதலில் அங்கு தீவிரமான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு ஃபைசர் தடுப்பூசி கொண்டு தடுப்பூசி பணிகளை அந்நாட்டு அரசு துரிதமாக மேற்கொண்டது.

இச்சூழலில் யாரும் எதிர்பாராத வகையில், கடந்த சில நாட்களாகவே அங்கு வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் அங்கு மொத்தம் 5324 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் 4,651 பேருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்குமிடங்களில் 661 பேருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

சிங்கப்பூரில் தினசரி கரோனா பாதிப்பு 5000ஐ தாண்டுவது இதுவே முதல்முறையாகும். வெறும் சில மணி நேரத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் இதற்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் அடுத்து வரும் நாட்கள் முக்கியமானவை என்பதால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருவோர் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களாக இருந்தால், அவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைச் சிங்கப்பூர் அரசு மெல்லத் தளர்த்தி வருகிறது.

அதேநேரம் உள்ளூரில் மக்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்வது போன்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தால் மட்டுமே கூடுதல் தளர்வுகளை அறிவிக்க முடியும் எனச் சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் அவசர சிகிக்கை படுக்கைகளில் மொத்தம் 79.8% இடங்கள் நிரம்பியுள்ளன. இது கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து குறைந்து வருகிறது. அதேநேரம் வரும் காலத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரித்தால் அதைச் சமாளிக்கும் வகையில் கூடுதலாக 100 ஐசியு படுக்கைகள் அடுத்த வாரம் தயாராகிவிடும் என சிங்கப்பூர் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com