‘அடுத்த தலைமுறைக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்’: கிளாஸ்கோ காலநிலை மாநாடு குறித்து போப் கருத்து

காலநிலை மாற்றத்தை தடுப்பு தொடர்பாக நடைபெறும் கிளாஸ்கோ மாநாட்டின் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு உறுதியான நம்பிக்கையை உலக நாடுகள் வழங்க வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்றத்திற்கான சிஓபி26 மாநாடு ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவில் அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கி நவம்பர் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் காலநிலை மாற்ற சிக்கல்களைத் தடுக்க உலக நாடுகள் கூட உள்ள இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், "இந்த மாநாட்டின் மூலம் அடுத்த தலைமுறைக்கு உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலான முடிவை உலக நாடுகள் எடுக்க வேண்டும்" என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

கடினமான சூழலில் இந்த மாநாடு நடைபெற்றாலும் இந்த மாநாட்டின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளும் அதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com