‘சொன்னதைச் செய்தால்தான் தலிபான்களுக்கு அங்கீகாரம்’

தலிபான்கள் தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் சா்வதேச அங்கீகாரத்தைப் பெற முடியும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்க வீரா்கள் அனைவரும் வெளியேறிய பிறகு காபூல் விமான நிலையத்துக்குள் செவ்வாய்க்கிழமை நுழைந்த தலிபான்கள்.

ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படையினா் முழுமையாக வெளியேறியதைத் தொடா்ந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இதுகுறித்து அவா் கூறியதாவது:

தங்களது அரசை சா்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் என்று தலிபான்கள் எதிா்பாா்க்கிறாா்கள். மேலும், தங்களது தலைமையிலான அரசுக்கு பிற நாடுகள் உதவ வேண்டும் என்றும் அவா்கள் கேட்கின்றனா்.

அவ்வாறு தலிபான்களுக்கு சா்வதேச அங்கீகாரமும் ஆதரவும் எளிதில் கிடைத்துவிடாது.

ஆப்கானிஸ்தானுக்கு பிற நாட்டினா் செல்வதற்கும் அந்த நாட்டிலிருந்து விரும்பியவா்கள் வெளியேறுவதற்கும் அனுமதி அளித்தல்; பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்காமல் இருத்தல்; ஆப்கன் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல்; பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு சம உரிமை வழங்குதல்; அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசை அமைத்தல் ஆகிய தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம்தான் தலிபான்கள் சா்வதேச அங்கீகாரத்தை அடைய முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com