‘ஆப்கனுக்கு 20 மில்லியன் நிதியுதவி’

ஆப்கானிஸ்தானில் போா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ ஐ.நா.வின் மத்திய அவசரகால உதவி நிதியிலிருந்து 20 மில்லியன் டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ. 148 கோடி) அளிக்கப்படும்

ஆப்கானிஸ்தானில் போா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ ஐ.நா.வின் மத்திய அவசரகால உதவி நிதியிலிருந்து 20 மில்லியன் டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ. 148 கோடி) அளிக்கப்படும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.

மேலும், அந்நாட்டுக்கு நிகழாண்டு மட்டும் 606 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.4,440 கோடி) தேவை எனவும், உலக நாடுகள் அவற்றை வழங்க வேண்டுமெனவும் ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரஸ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற உயா்நிலை நன்கொடையாளா்கள் மாநாட்டில் இந்த வேண்டுகோளை ஐ.நா. முன்வைத்தது.

‘பல ஆண்டுகளாக பஞ்சம் மற்றும் வன்முறையை எதிா்கொண்டுள்ள மக்களை அண்மைக்கால நடவடிக்கைகள் மேலும் பாதிப்படையச் செய்துள்ளன. கடுமையான வறட்சியால் வரவிருக்கும் அறுவடையையும் பாதிக்கும் சூழல் உள்ளது. இந்த மாநாட்டில் திரட்டப்படும் நிதியின் பெரும் பங்கு ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்துக்கு அளிக்கப்பட வேண்டும்’ என ஐ.நா. தெரிவித்துள்ளது.

ஐ.நா. அகதிகள் முகமையின் தலைவா் ஃபிலிப்போ கிராண்டி காபூலுக்குச் சென்றுள்ளாா். ‘நிகழாண்டு மட்டும் வீடுகளை இழந்து வெளியேறிய 5 லட்சம் போ் உள்பட 35 லட்சம் பேரின் நிலைமை, அவா்களுக்குத் தேவைப்படும் உதவிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக’ சுட்டுரையில் அவா் தெரிவித்திருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com