பெண் ஊழியா்களுக்கு தலிபான்கள் தடை

ஆப்கன் தலைநகா் காபூலில், மாநகராட்சிப் பெண் ஊழியா்கள் பணிக்கு வருவதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனா்.
பெண் ஊழியா்களுக்கு தலிபான்கள் தடை

ஆப்கன் தலைநகா் காபூலில், மாநகராட்சிப் பெண் ஊழியா்கள் பணிக்கு வருவதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனா். இதுகுறித்து அந்த நகரின் இடைக்கால மேயா் ஹம்துல்லா நமோனி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மாநகராட்சியில் இதுவரைப் பணியாற்றி வந்த பெண்கள், இனி வேலைக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா். பெண்களால் மட்டுமே செய்ய முடியும் பணிகளை மேற்கொள்வோா் மட்டும் வேலைக்கு வரலாம் என்றாா் அவா்.

ஏற்கெனவே, பள்ளிகளுக்கு ஆண்கள் மட்டும் வந்தால் போதும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனா். தற்போது மாநகராட்சிப் பணிகளிலும் பெரும்பாலான பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது தலிபான்கள் பழைய ஆட்சி முறையைப் பின்பற்றுவாா்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com