உணவின்றி பசியால் வாடும் ஆப்கன் மக்கள்: ஐ.நா. கவலை

தலிபான்களின் வசம் ஆப்கானிஸ்தான் சென்றபிறகு அங்குள்ள பெரும்பாலான மக்கள் உணவின்றி பசி, பட்டினியில் தவித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளார். 
உணவின்றி பசியால் வாடும் ஆப்கன் மக்கள்: ஐ.நா. கவலை

தலிபான்களின் வசம் ஆப்கானிஸ்தான் சென்றபிறகு அங்குள்ள பெரும்பாலான மக்கள் உணவின்றி பசி, பட்டினியில் தவித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளார். 

ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதுகுறித்து கூறுகையில், 'ஐ.நா.வின் மனிதநேய விமான சேவை ஆப்கானிஸ்தானின் பல்வேறு நகரங்களுக்கும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. பல வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக சாலைவழி சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், உலக உணவு திட்ட கணக்கெடுப்பில் ஆப்கானிஸ்தானில் 5 சதவீதம் பேருக்கு மட்டுமே தினமும் போதுமான அளவு உணவு கிடைக்கிறது. 

வேலை இழப்பு, பணப் பற்றாக்குறை மற்றும் உணவுப் பொருள்களின் விலை உயர்வு ஆகியவை ஆப்கானிஸ்தானில் மக்களை உணவில்லா நிலைக்குத் தள்ளியுள்ளது. 

செப்டம்பர் 13 வரை, ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய $1.2 பில்லியனுக்கும்(தோராயமாக ரூ. 8,847 கோடி) அதிகமான நன்கொடை வந்தது. இருப்பினும், ஆண்டின் இறுதியில் தேவைப்படும் $606 மில்லியனில்(ரூ. 4,467 கோடி) 20 சதவிகிதம், அதாவது $ 121 மில்லியன்(ரூ.884 கோடி) மட்டுமே பெறப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களுக்குத் தேவானவற்றை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றால் இந்த நிதி அவசியம். 

பொருள்கள், மக்களுக்கு சிகிச்சைகள் என பல்வேறு வழிகளிலும் அங்குள்ள மக்களுக்கு உதவி கிடைக்கிறது. எனினும், பெரும்பாலான ஆப்கன் மக்கள் உணவின்றித் தவித்து வருகின்றனர்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com