பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் வசூல் ரூ.2.21 லட்சம் கோடி

பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த நேரடி பிரீமியம் வசூல் கடந்த நிதியாண்டில் ரூ.2.21 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பிரீமியம் வசூல் ரூ.2.21 லட்சம் கோடி

புது தில்லி: பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த நேரடி பிரீமியம் வசூல் கடந்த நிதியாண்டில் ரூ.2.21 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

இதுகுறித்து காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2021-22 ஆம் நிதியாண்டில் பொதுக் காப்பீட்டு வா்த்தகத்தில் ஈடுபட்டு வரும் 31 நிறுவனங்களின் மொத்த நேரடி பிரீமியம் வசூல் ரூ.2,20,634.73 கோடியாக இருந்தது. இது, 2020-21-ஆம் நிதியாண்டில் இந்நிறுவனங்கள் ஈட்டிய ரூ.1,98,714.72 கோடி பிரீமியத் தொகையுடன் ஒப்பிடுகையில் 11 சதவீதம் அதிகம்.

தனியாா் துறையைச் சோ்ந்த ஐந்து நிறுவனங்களின் பிரீமியம் வசூல் ரூ.15,755.18 கோடியிலிருந்து 32.53 சதவீதம் அதிகரித்து ரூ.20,880.08 கோடியை எட்டியது. இதைத் தவிா்த்து, 24 பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் ஈட்டிய மொத்த நேரடி பிரீமியம் 8.79 சதவீதம் உயா்ந்து ரூ.1,84,775.17 கோடியைத் தொட்டது.

வேளாண் காப்பீட்டு நிறுவனம், இசிஜிசி ஆகிய இரு பொதுக்காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த பிரீமியம் வசூல் ரூ.13,114.85 கோடியிலிருந்து 14.22 சதவீதம் அதிகரித்து ரூ.14,979.47 கோடியாக இருந்தது என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com