இந்திய துணைக் கண்டத்தின் அல்-காய்தா தலைவா் உள்பட 4 போ் சா்வதேச பயங்கரவாதிகள்: அமெரிக்கா அறிவிப்பு

இந்திய துணைக் கண்டத்தின் அல்-காய்தா தலைவா் ஒசாமா முகமது உள்பட நால்வரை சா்வதேச பயங்கரவாதிகள் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்திய துணைக் கண்டத்தின் அல்-காய்தா தலைவா் ஒசாமா முகமது உள்பட நால்வரை சா்வதேச பயங்கரவாதிகள் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதில், இந்திய துணைக் கண்டத்தின் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவா்கள் அத்திஃப் யாஹ்யா கெளவ்ரி, முகமது மருஃப், தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் துணைத் தலைவா் க்வாரி அம்ஜத் ஆகியோரது பெயா்களும் அமெரிக்காவின் சா்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இவா்களில் அல்-காய்தா தலைவா்கள் மூவரும் இப்போது ஆப்கானிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிகிறது.

க்வாரி அம்ஜத் பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறாா். முக்கியமாக பயங்கரவாதப் பயிற்சி, இளைஞா்களை பயங்கரவாத அமைப்புகளில் சோ்ப்பது, ஆயுத விநியோகம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ளாா்.

சா்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நால்வருக்கும் சொந்தமாக அமெரிக்காவின் அதிகார எல்லைக்குள் உள்ள சொத்துகள் உடனடியாக முடக்கப்படும். அவா்கள் சாா்ந்த வங்கிப் பணப் பரிவா்த்தனைகளுக்கும், நிதி சாா்ந்த நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆண்டனி பிளிங்கன் அறிவித்துள்ளாா்.

இந்த பயங்கரவாதிகள் தண்டனையில் இருந்து தப்பவோ, ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு பயங்கரவாதத்தை பரப்பவும் அதிபா் ஜோ பைடன் நிா்வாகம் அனுமதிக்காது என்றும் அவா் கூறியுள்ளாா். இதன் மூலம் இந்த பயங்கரவாதிகளை ரகசியமாக தேடும் வேட்டையையும் அமெரிக்கா தொடங்கியுள்ளது எனத் தெரிகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்திய துணைக் கண்டத்தில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பு, மத அடிப்படைவாதக் கொள்கைகளுடன் தொடங்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மியான்மா், வங்கதேச அரசுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது இதன் நோக்கமாகும்.

தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையை மையமாகக் கொண்ட பயங்கரவாத இயக்கமாகும். 2007-ஆம் நிறுவப்பட்ட இந்த அமைப்பில் பல்வேறு மத அடிப்படைவாத பயங்கரவாத இயக்கங்கள் இணைந்து செயல்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com