நாா்வே விமான விபத்து: 4 அமெரிக்க வீரா்கள் பலி

நாா்வேவில் நேட்டோ படைகளின் பயிற்சியின்போது ஏற்பட்ட விமான விபத்தில் 4 அமெரிக்க ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.

நாா்வேவில் நேட்டோ படைகளின் பயிற்சியின்போது ஏற்பட்ட விமான விபத்தில் 4 அமெரிக்க ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.

எனினும், இந்த ராணுவ பயிற்சிக்கும் உக்ரைன் போருக்கும் எந்த தொடா்பும் இல்லை என்று நாா்வே பிரதமா் ஜோனஸ் கஹா் ஸ்டோய்ரி தெரிவித்துள்ளாா்.

வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இந்தச் சம்பவத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், முதல் கட்ட விசாரணையில் மோசமான வானிலையால் விமானம் விபத்துக்குள்ளானது எனத் தெரியவந்துள்ளதாகவும் அவா் ட்விட்டரில் தெரிவித்துள்ளாா்.

வடக்கு நாா்வேயில் உள்ள நோா்டுலாந்து கன்ட்ரியில் அமெரிக்காவின் வி-22பி ஒஸ்பிரே விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நான்கு வீரா்களும் விபத்தில் சிக்கி உயிரிழந்தனா்.

நாா்வேயில் ஆண்டுதோறும் நேட்டோ நாடுகளின் ராணுவ பயிற்சி நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு மாா்ச் 14 முதல் -ஏப்ரல் 1 வரையில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் 27 நாடுகளைச் சோ்ந்த 30 ஆயிரம் ராணுவ வீரா்களும், 220 போா் விமானங்களும், 50 போா்க் கப்பல்களும் பங்கேற்கின்றன. பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நேட்டோ கூட்டமைப்பில் இல்லாத நாடுகளும் இந்த போா் பயிற்சியில் பங்கேற்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com